புதுடெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், பயணிகளின் வசதிக்காக அதிரடியாக சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்பைஸ்ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பல நன்மைகள் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SpiceMax, விருப்பமான இருக்கைகள் மற்றும் முன்னுரிமை சேவையில் 25% தள்ளுபடி கிடைக்கும். அதோடு, விமான பயணத்திற்கு முன்பதிவு செய்துள்ள தேதியில் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ஏற்படும் பண நட்டம் இருக்காது. 


ஸ்பைஸ்ஜெட்டின் இலவச தேதி மாற்றச் சலுகையில் (SpiceJet Free Date Change Offer), புதிய முன்பதிவு செய்யலாம். ஸ்பைஸ்ஜெட்டின் இந்த சலுகையின் கீழ், நீங்கள் ஜனவரி 8 முதல் ஜனவரி 31, 2022 வரை விமானங்களை முன்பதிவு செய்யலாம். இந்தச் சலுகையின் கீழ், நீங்கள் 31 மார்ச் 2022 வரை பயணம் செய்யலாம். 


ஸ்பைஸ்ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், SpiceMax, விருப்பமான இருக்கைகள் மற்றும் முன்னுரிமை சேவையில் 25% தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://spicejet.com இல் விமானங்களை முன்பதிவு செய்யலாம்.


ALSO READ | ₹ 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் விமான டிக்கெட்


ஸ்பைஸ்ஜெட்டின் இலவச தேதி மாற்றச் சலுகையின் கீழ், விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன்னதாக நீங்கள் மாற்றக் கோரிக்கையை அளிக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், தேதி மாற்றத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான கட்டணத்தை செலுத்த வேண்டும். 


இந்த சலுகை வரையறுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும், இந்த சலுகை முதலில் வரும் குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்பைஸ்ஜெட் பல விமான நிலையங்களில் மோசமான வானிலையால் சேவைகளில் சுணக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தரம்சாலா, டெல்லி, தர்பங்கா, ஸ்ரீநகர் ஆகிய விமான நிலையங்களுக்கு மோசமான வானிலை காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பயணிகளுக்கு தெரிவித்துள்ளது. 


அத்தகைய சூழ்நிலையில், பயணிகள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் தங்கள் விமானத்தின் புறப்பாட்டு நேரத்தை சரிபார்த்துவிட்டு கிளம்பவேண்டும் என்று கூறுகிறது. மேலும், அஜ்மீர், பாட்னா, ராஜ்கோட் ஆகிய பகுதிகளிலும் மோசமான வானிலையால், பயணங்களில் மாற்றம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ALSO READ | ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாலயா?... கவலை வேண்டாம் அதே விலையில் விமான டிக்கெட் பெறலாம்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR