பிசியான வாழ்வியல் சூழலில், நம் மனதில் தூக்கத்திற்கு கடைசி முக்கியத்துவம்தான் இருக்கும். பலருக்கு தனிப்பட்ட வாழ்க்கையாலும் தங்களின் தொழில் வாழ்க்கையினாலும் இரவில் படுத்தால் தூக்கம் வரவில்லை என்று கூறுகின்றனர். சமீபத்தில் நடத்தப்படும் மருத்துவ ஆய்வுகளில் சரியான தூக்கம் இல்லாததால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மருத்துவர்கள், இரவு 10-11 மணிக்குள்ளாக உறங்க சென்று விட வேண்டும் என்றும், 6-7 மணி நேரமாவது சராசரியாக உறங்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பலருக்கு அவர்கள் இரவில் உறங்கும் நேரமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூக்கத்தை இழப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு..


தூக்க நேரம் குறைவாக இருப்பவர்களை விட, சரியான நேரம் தூங்குபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என சமீபத்திய மருத்துவ ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், யார் 6 முதல் 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறார்களோ அவர்கள் உடலில் புற்றுநோய் பரவும் அபாயம் 59 சதவிகிதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சரியான நேரம் தூங்குவதற்கான முக்கியத்துவம்..


உடலுக்கு தண்ணீர், உணவு எந்த அளவிற்கு தேவையோ அதே அளவிற்கு சரியான நேரம் தூங்குவதும் தேவையானதுதான். நம் உடலில், சர்காடியன் ரிதம் என்ற ஒன்று உள்ளது. இது, நம் உடலில் உள்ள நேச்சுரலான கடிகாரமாகும். இது, நாம் தூங்கும் நேரம், எழுந்து கொள்ளும் நேரம் ஆகியவற்றை இதுதான் தீர்மானிக்கும். எனவே, நாம் நம் உடலுக்கு தேவையா தூக்க நேரத்தை தினமும் கடைப்பிடிக்கவில்லை என்றால் இது, கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடலில் நோய் தாங்கும் ஆற்றலை குறைத்து விடும். இதனால் மார்பகம், கருப்பைகள், சிறுநீர்ப்பை ஆகியவற்றை பாதிக்கும். சரியான தூக்கம் இல்லாததால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால் உடலில் உள்ள கேன்சர் செல்கள் அதிகரிக்கவும் செய்யலாம் என மருத்துவர்களால் கூறப்படுகிறது. 


சரியான தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்? 


ஒருவர், தனது உடலை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால், கண்டிப்பாக நன்றாக தூங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ் இதோ. 


மேலும் படிக்க | பற்கள் ரொம்ப மஞ்சள் மஞ்சளா இருக்கா.. இந்த ஆயுர்வேத வைத்தியம் ட்ரை பண்ணுங்க


இரவில் கேட்ஜெட்டுகளை தள்ளி வைக்கவும்:


இரவில் தூங்க செல்வதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்னர் கண்டிப்பாக செல்போன், டிவி, டேப் உள்ளிட்டவற்றை உபயோகிப்பதை நிறுத்திவிடுங்கள். உறங்கும் போதும் உங்கள் செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதை தவிர்க்கவும். இப்படி சில நாட்கள் செய்தாலே போதும். கண்டிப்பாக உங்களது உறக்க நேரத்தில் மாற்றத்தை உணருவீர்கள். 


காபி-டீ வேண்டாம்:


இரவு உணவுக்கு பிறகு பலருக்கு காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். படுக்க செல்வதற்கு முன்னர் கண்டிப்பாக காபு அல்லது டீ பருகுவதை நிறுத்தவும். 


சூடான குளியல்:


சில சமயங்களில் அதிக சோர்வு இருப்பதால் கூட உறக்கம் வராமல் இருக்கும். எனவே, தூங்க செல்வதற்கு முன்னர் சூடான தண்ணீரில் ஒரு குளியலை போடுங்கள். இது, இரவில் நல்ல உறக்கம் வருவதற்கு உதவும். 


மாலை உடற்பயிற்சி:


மாலை வேளைகளில் ஏரோபிக் அல்லது கார்டியோ உடற்பயிர்சி செய்வது உடலுக்கு நல்லதையும் செய்து, இரவில் உறக்கம் வருவதற்கும் உதவி செய்யும். 


காலையில் சீக்கிரம் எழுங்கள்..


சில சமயங்களில், காலை மிகவும் தாமதமாக எழுவதும் இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். இரவில் நீங்கள் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரம் எழுவது கண்டிப்பாக உங்களுக்கு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால், நீங்கள் தினமும் செய்ய நினைக்கும் செயல்களை நிகழத்தவும் நேரமிருக்கும். 


மேலும் படிக்க | ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பிட்னஸ் ரகசியங்கள் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ