ரவீந்திர ஜடேஜாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்டில் பலதரப்பட்ட உடற்பயிற்சிகளும், சரியான உணவுமுறைகளும் அடங்கும். இந்த செயல்முறை உடலை எப்போதும் பிட்டாக வைத்து கொள்ளவும், எப்போதும் ஆக்டிவாக இருக்கவும் உதவுகிறது. ஜடேஜாவின் உடற்பயிற்சி வழக்கத்தைப் பற்றி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா, மைதானத்தில் தனது சிறப்பான செயல்பாட்டால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அவரது ஆக்ரோஷமான மற்றும் ஸ்டைலான கிரிக்கெட் பலருக்கும் பிடிக்கும். மேலும் அவரது பீல்டிங்கை பார்த்து ஆர்ச்சர்யப்படாதவர்கள் இருக்க முடியாது.
மேலும் படிக்க | மும்பை ஸ்கெட்சில் சிக்காத முகமது ஷமி, குல்தீப், மிட்செல் மார்ஷ்...!
ஜடேஜாவின் உடற்தகுதிக்கான அணுகுமுறை
ஜடேஜாவின் வெற்றி என்பது திறமை மட்டும் அல்ல, அது அவரது உடற்தகுதியை சுற்றி உள்ளது. அவரது கடுமையான உடற்பயிற்சி முறை மற்றும் சரியான உணவுமுறை ஆகியவை அவரது பிட்டான உடலுக்கு வழி வகை செய்கிறது. இந்த பழக்கம் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் முக்கியமான ஒன்று ஆகும். ஜடேஜா தனது உடற்பயிற்சியில் வலிமை பயிற்சி, கார்டியோ, உடல் எடை பயிற்சிகள் மற்றும் பிட்னஸ் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்கிறார். இவை மைதானத்தில் துல்லியமாக பீல்டிங் செய்ய உதவுகிறது.
ஜடேஜா தனது உடற்பயிற்சிகளை காலையில் எளிதான வாக்கிங் மற்றும் ஜாக்கிங் உடன் தொடங்குகிறார். ஒவ்வொரு நாளும் இந்த எளிய மற்றும் பயனுள்ள நடைமுறையை தவறாமல் செய்வது, அவரது உடல் ஆக்டிவாக இருப்பதை உறுதிசெய்கிறது மற்றும் உடற்பயிற்சியின் பின் சீராக மீட்க உதவுகிறது. ஜடேஜாவின் உடற்தகுதி முறையில் முக்கியமான ஒன்று உடல் வலிமை. ஜிம்மில் அவர் செய்யும் பயிற்சிகள் அவரது தசை, கை கால்களுக்கு ஒட்டுமொத்த வலிமை மற்றும் சக்தியை கொடுக்கிறது.
கார்டியோ
ரன்னிங், ஸ்கிப்பிங் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியில் ஜடேஜா ஈடுபடுகிறார். இந்த நடவடிக்கைகள் அவரது சகிப்புத்தன்மையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவரது உடற்பயிற்சி பயணத்தின் முக்கிய அம்சமான உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது. புஷ்-அப்கள், புல்-அப்கள் பயிற்சிகளை தனது தினசரி வழக்கத்தில் கொண்டுள்ளார். இந்த பயிற்சிகள் வேகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வலிமைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அளிக்கின்றன. மேலும், எடை பயிற்சி ஜடேஜாவின் வழக்கமான ஒரு முக்கிய பகுதியாகும், இது தசை வளர்ச்சி மற்றும் கூடுதல் சக்திக்கு உதவுகிறது.
ஜடேஜாவின் உணவு முறைகள்
ஜடேஜாவின் உணவுத் தேர்வில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவை தேர்வு செய்கிறார். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆரோக்கியமான காலை உணவு மற்றும் சத்தான சிற்றுண்டிகளில் கவனம் செலுத்துகிறார். மேலும், கம்மியான அளவில் அரிசி சாப்பாட்டை சாப்பிடுகிறார். கடந்த ஆகஸ்ட் 2022ல் முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை எடுத்து கொண்ட போதிலும், ஜடேஜா மீண்டும் கம்பேக் கொடுத்து தனது திறமையை நிரூபித்துள்ளார். தோல்விகள் கிரிக்கெட் விளையாட்டின் மீதான அவரது உணர்வை ஒருபோதும் பாதிக்காது என்பதை அவர் காட்டுகிறார்.
ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக ஜடேஜா இருந்தார். மேலும் உலக கோப்பை 2023ல் தனது சிறந்த பார்மை அணிக்கு வழங்கினார். ஜடேஜா டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சமும், டி20க்கு ரூ.3 லட்சமும் சம்பளமாக பெறுகிறார். 2023ல் ஜடேஜா ஏழு டெஸ்ட் மற்றும் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் படிக்க | தோனி கோபப்படக்கூடிய ஒரே விஷயம் இதுதான் - மேத்யூ ஹைடன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ