காலை எழுந்தவுடன் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை!! நீரிழிவு நோயாக இருக்கலாம்

Diabetes Symptoms: சர்க்கரை நோயின் அறிகுறிகள் மிகவும் சாதாரணமாக இருந்தாலும், இவற்றை பற்றிய புரிதல் கொண்டு இவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டியது மிக அவசியம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 26, 2023, 11:03 PM IST
  • காலையில் வாந்தி எடுப்பது போல் உணர்ந்தால் அது சர்க்கரை நோயாக இருக்கலாம்.
  • பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி சங்கட பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • ஆனால் இது நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் பிரச்சனையாகவும் இருக்கலாம்.
காலை எழுந்தவுடன் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை!! நீரிழிவு நோயாக இருக்கலாம் title=

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை வாழ்க்கை முறை சார்ந்த நோய்களாகும். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இவற்றின் அறிகுறிகள் முன்கூட்டியே தெரிவதில்லை. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அமைதியான கொலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து நோய்களையும் போலவே சர்க்கரை நோய்க்கும் சில அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 
இந்த அறிகுறிகள் மிகவும் சாதாரணமாக இருந்தாலும், இவற்றை பற்றிய புரிதல் கொண்டு இவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டியது மிக அவசியம். நீரிழிவு நோயின் சில முக்கிய அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றின் மீது சிறிது கவனம் செலுத்தினால், பல பெரிய அபாயங்களை நாம் தவிர்க்கலாம். 

வாய் வறண்டு போனால் கவனம் செலுத்துங்கள்

பொதுவாக அனைவரும் காலையில் மிகவும் புத்துணர்ச்சியுடன் எழுவார்கள். ஆனால், இதில் ஏதேனும் மாறுபாடு தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காலையில் வாய் வறண்டு இருந்து, இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்தால், அதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், வறண்ட வாய்க்கு வேறு காரணங்களும் இருக்கலாம். சர்க்கரை நோயை உறுதிப்படுத்த பரிசோதனை அவசியம்.

மேலும் படிக்க | ஈசியா உடல் எடை குறைக்கணுமா? இந்த ஜூஸ் குடிங்க, ஒரே வாரத்தில் குறையும்!!

குமட்டல் உணர்வு

இதுவும் சர்க்கரை நோய் இருப்பதற்கான சாத்தியமான அறிகுறியாகும். காலையில் வாந்தி எடுப்பது போல் உணர்ந்தால் அது சர்க்கரை நோயாக இருக்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி சங்கட பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இது நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

மங்கலான பார்வை

காலையில் கண்களைத் திறக்கும்போது தெளிவாகத் தெரியவில்லை என்றால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு காரணமாக, கண்களின் லென்ஸின் அளவு சற்று பெரியதாக இருக்கலாம். இது தெளிவின்மையை உருவாக்கும். 

கண்களில் வீக்கம்

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நபர்களுக்கு திரவம் கண்களில் இருந்து வெளியேறுகிறது. இது கண்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கணுமா? இதை சாப்பிடுங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News