டொனால்ட் டிரம்ப் பின் தலைமுடியின் நிறம் மாறிவிட்டதை புகைப்படங்கள் உறுதி செய்கின்றன. தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது தலை முடியின் நிறத்தை மாற்றிவிட்டார் டிரம்ப். ஆரஞ்சு வண்ண சாயத்தில் இருந்து வெண்மைக்கு மாறிவிட்டார் டிரம்ப். முன்னாள் அமெரிக்க அதிபரின் தலைமுடி சாயத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா? $70,000 டாலர் மட்டும் தான்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

70,000 தலைச் சாயத்திற்க்கு செலவு செய்யும் டிரம்ப் இப்போது திடீரென்று ஆரஞ்சு வண்ணத்தில் இருந்த முடியை வெள்ளை முடியாக்கிவிட்டார். முடியின் வண்ணத்தை மாற்றுவதற்கு தானே சாயம் பூச வேண்டும்? வெண்நரையாக மாற்றுவதற்கு சாயம் எதற்கு 70,000 டாலர் பணம் எதற்கு என்று கேட்கிறீர்களா? கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளியும் முடியலாம், கொண்டையும் போடலாம்! விரித்தும் விட்டுக் கொள்ளலாம்….


இதற்கு நெட்டிசன்கள் கலக்கலாக ட்வீட்களை போட்டு இன்று டிரம்பின் டை என்பது வைரலாகிறது.  



அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க டொனால்ட் டிரம்ப் இன்னும் மறுத்து வருகிறார்.  அது ஒருபுறம் என்றால், டொனால்ட் டிரம்பின் தலைமுடி பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருந்து dull grey நிறத்திற்கு மாறிவிட்டது.  


அமெரிக்காவின் தற்போதைய அதிபர் வெள்ளை மாளிகை வளாகத்தில் இருந்து கோவிட்-19க்கான தடுப்பு மருந்து பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார். முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் ஓவல் மாளிகையில் இருந்துக் கொண்டு தலைக்கு சாயம் தான் அடித்துக் கொண்டிருக்கிறார் போல!!!! 
இப்போது அதிபர் தேர்தல் சர்ச்சையில் இருந்த டொனால்ட் டிரம்ப் தற்போது சிகை அலங்கார சர்ச்சைக்குள் திசை திரும்பிவிட்டார்.  


இப்படி அடம் பிடிக்கும் பிடிவாதக்கார 74 வயது டிரம்பைப் பற்றி சமூக ஊடகங்களில் அனைவரும் நக்கலும் நையாண்டியும் செய்கின்றனர். அவற்றில் இருந்து சில: 
“டிரம்பின் தலைமுடி தங்கத்திலிருந்து வெள்ளியாக மாறிவிட்டது. ஏனெனில் அவர் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டார்.”



மற்றொரு பயனர் எழுதினார், “ஒன்று டிரம்ப்பின் சிகை அலங்கார நிபுணர் புது யோசனை சொல்லிவிட்டார். அல்லது டிரம்ப் படிப்படியாக ஜோ பிடனாக உருமாற முயற்சிக்கிறார், நாம் யாரும் அதை கவனிக்க மாட்டோம் என்று நம்புகிறாரோ?”


ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரை அமெரிக்கா தேர்ந்தெடுத்து விட்ட நிலையில், வெள்ளை மாளிகையின் புதிய சொந்தக்காரர்களான அவர்களுக்கு இடம் விடாமல் அடம் பிடிக்கிறார் டிரம்ப். தனது தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்ப், நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு என்று விடாமல் பிடிவாதம் பிடிக்கிறார்.  



டொனால்ட் டிரம்பின்  சாயம் (தலைச்சாயம்) வெளுத்துவிட்டதோ?  



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR