ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் அஸ்தமித்தால், அது மனித வாழ்க்கையில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. தற்போது, ​​கிரகங்களின் அதிபதியான புதன் அஸ்தம நிலையில் உள்ளது. புதன் கிரகம் மார்ச் 14, 2022 திங்கட்கிழமை காலை 05:53 மணிக்கு அஸ்தமமானார். ஏப்ரல் 12, 2022 செவ்வாய்கிழமை மாலை 07:32 மணிக்கு அவர் மீண்டும் உதயமாவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் கிரகம் மொத்தம் 30 நாட்கள் அஸ்தமனமாக, அந்த நிலையிலேயே இருக்கும். புதனின் அஸ்தம காலத்தில் எந்தெந்த ராசிகளுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


மேஷம்:
புதன் உங்கள் ராசிக்கு 11ம் ஸ்தானத்தில் அஸ்தமமாகியுள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்துக்கான  ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் தொழில், வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வருமான வழிகளில் தடைகள் ஏற்படலாம். கூடும் நிலையில் இருக்கும் வணிகர்களின் ஒப்பந்தங்கள் கடைசி கட்டத்தில் நிறுத்தப்படலாம். இந்த காலத்தில் பணத்தை முதலீடு செய்வதில் கவனம் தேவை.


மேலும் படிக்க | சைத்ர நவராத்திரி: இந்த 6 ராசிகளுக்கு அன்னை துர்கை வெற்றியை அள்ளித் தருவாள்! 


ரிஷபம்:
புதனின் அஸ்தமனம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் ஸ்தானத்தில் ஏற்பட்டுள்ளது. ஒன்பதாம் ஸ்தானம் வேலை மற்றும் தொழிலின் ஸ்தானமாகும். இதனால் உத்தியோகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை வாய்ப்புகள் இழக்கப்படலாம். 


ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். மூத்த அதிகாரிகளுடனான உறவுகள் மோசமடையக்கூடும். வேலையில் உங்கள் கடின உழைப்பின் பலன் கிடைக்காமல் போகலாம்.


மிதுனம்:
புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அஸ்தமமாகியுள்ளார். ஒன்பதாம் வீடு அதிர்ஷ்டம் மற்றும்  வெளிநாட்டு பயணத்து ஸ்தானமாகவும் கருதப்படுகிறது. புதனின் அஸ்தமத்தால் ஏப்ரல் 12 வரை மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாகவே இருக்கும். நீங்கள் நினைத்து வைத்திருந்த பணிகள் நடக்காமல் போகலாம்.  


புதனின் அஸ்த காலத்தின் போது நீங்கள் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வணிகத்தில் முடிவடையில் நிலையில் உள்ள ஒப்பந்தங்கள் நிறைவேறாமல் போகலாம். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.


மேலும் படிக்க | எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காத ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR