எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காத ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?

Personality by Zodiac Sign: அதிகமாக பணம் செலவு செய்து, பணத்தை தக்க வைத்துக்கொள்ள தெரியாத சில ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2022, 10:21 AM IST
  • தனுசு ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்கிறார்கள்.
  • வாழ்க்கைத் தரத்தில் சிறு குறை இருந்தாலும் இவர்களுக்கு பிடிக்காது.
  • அதிக பணம் செலவழிப்பதால், அவர்களால் பெரிய செல்வந்தர்களாக மாற முடிவதில்லை.
எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காத ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன? title=

ராசி பலன்: ஜோதிடத்தில், ராசிகளின் தன்மை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கிரகங்களின் இயக்கம் மற்றும் நிலை ஆகியவை ராசிகளில் சிறப்பு விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்தனியான குணங்கள் மற்றும் குணாதிசயங்கள் இருக்கும். 

சில ராசிக்காரர்கள் அதிகமாக செலவு செய்வார்கள், சிலர் கஞ்சத்தனமாக இருப்பார்கள். சிலர் தங்கள் பணத்தை தங்களுக்காகவும், பிறருக்காகவும் செலவழிக்க தயங்கமாட்டார்கள், சிலரோ தங்களுக்கென்றே சம்பாதிப்பார்கள். சிலர் நண்பர்களுக்கு பணத்தை வாரி வழங்குவார்கள்.

அதிகமாக பணம் செலவு செய்து, பணத்தை தக்க வைத்துக்கொள்ள தெரியாத சில ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். பணம் சேமிக்க விரும்பினாலும் இவர்களால் அதை செய்ய முடியாது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவர்களின் செலவு குறைவதில்லை. 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் தங்களை விட நண்பர்களுக்காக அதிக பணம் செலவழிப்பார்கள். இவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். பலர் இவர்களது இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் இதயம் மென்மையானது. இவர்கள் அனைவரிடமும் மிக விரைவாக இரக்கம் கொள்கிறார்கள். 

இவர்களை உணர்ச்சிவசப்படுத்தி எளிதாக ஏமாற்றி விடலாம். எனினும், இவர்களது தாராள குணத்தால், இவர்களுடன் உறுதியாக நிற்கும் நண்பர் கூட்டத்துக்கும் குறைவிருக்காது. 

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்களின் தலைவிதி பிரகாசமாகப்போகிறது 

கடகம்:

இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிகம் செலவு செய்யும் பழக்கம் உடையவர்கள். இவர்கள் சமூகத்தில் தங்கள் அந்தஸ்தை அதிகரிக்க அதிகம் செலவழிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ விரும்புகிறார்கள். 

வாழ்க்கைத் தரத்தில் சிறு குறை இருந்தாலும் இவர்களுக்கு பிடிக்காது. கடக ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களுக்கு அதிகமாக உதவும் இயல்புடையவர்கள். தங்கள் நண்பர்களுக்காக அதிக பணம் செலவழிக்கிறார்கள். இவர்களுடைய இந்த பழக்கத்தை பயன்படுத்தி, சிலர் இவர்களை ஏமாற்றுவதும் உண்டு. 

தனுசு:
இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்கிறார்கள் ஆனால் பணத்தை சேமிக்க இவர்களால் முடியாது. ஒவ்வொரு முறையும் தனுசு ராசிக்காரர்கள் பணத்தை சேமிக்க நினைத்தாலும், அப்படி செய்வதில் அவர்கள் அரிதாகவே வெற்றி பெறுகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. ஆனால் அவர்களால் தங்களுக்கென பணத்தை ஒதுக்கி வைக்க முடிவதில்லை. 

மீனம்:

இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிகம் செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களின் செலவுகள் எப்போதும் அவர்களின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும். அவர்கள் சம்பாதிப்பதைத் தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் செலவழித்து விட்வார்கள். 

மீன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். ஆனால், அதிக பணம் செலவழிப்பதால், அவர்களால் பெரிய செல்வந்தர்களாக மாற முடிவதில்லை. அவர்கள் தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த அதிக முயற்சி செய்தாலும் சிலரே அதில் வெற்றி பெறுகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் அஸ்தமனத்தால் பாடாய் படப்போகும் இந்த 3 ராசிக்காரர்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News