ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும்

ஏப்ரல் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 28, 2022, 02:38 PM IST
  • ஏப்ரல் மாத ராசிபலன்
  • பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.
  • லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும்.
ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும் title=

ஜோதிடத்தின் படி, ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் பல பெரிய மற்றும் முக்கியமான கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படப்போகின்றது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். இந்த கிரகமாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தரும் மேலும் சில ராசிக்காரர்கள் சிரமங்களை தரும். ஏப்ரல் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம் - ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் மாதம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் தரும். ஏப்ரல் மாதம் ராகுவின் ராசி மாறப்போகிறது. தற்போது ராகு உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார். ராகு உங்கள் ராசியை விட்டு வெளியேறிய உடன் வாழ்க்கையில் தடைகளில் இருந்து விடுபடுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம்.

மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் பல காரியங்களில் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். படிப்பில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். அமைதியான சூழல் ஏற்படும். இந்த நேரத்தில் லட்சுமி தேவி உங்களுக்கு சிறப்பு ஆசீர்வாதங்களை தருவார்.

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் நன்மை தரும். இதன் போது நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். ஏப்ரலில் கேது உங்கள் ராசியை விட்டு வெளியேறுகிறார். அதன் பிறகு பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். காதல் விஷயத்தில் வெற்றி உண்டாகும். பண வரவுகள் இருக்கும். முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த நேரம்.

தனுசு- தனுசு ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். சனி பகவானால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறையும். லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பண ஆதாயங்களின் தொகையைப் பெறுவீர்கள். வேலை மாற்றத்திற்கு சாதகமான காலம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News