பணக்காரர் ஆக வேண்டுமா? கனவை நனவாக்க, கண்டிப்பாக இதை செய்யுங்கள்
செல்வந்தர் ஆக வேண்டும் என்ற கனவு நனவாகும், கண்டிப்பாக இந்த சிறப்பு நடவடிக்கைகளை செய்யுங்கள்
புதுடெல்லி: பணக்காரர் ஆக வேண்டும் என்று எல்லோருக்கும் கனவு இருக்கும். இன்றைய பொருளாதார யுகத்தில், மனிதர்களின் மிகப்பெரிய தேவைகளில் ஒன்று பணம். பிறப்பிலிருந்தே சிலரின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அதே சமயம் பணம் சம்பாதிப்பதற்காக இரவும் பகலும் பாடுபட வேண்டியவர்கள் பலர் இருப்பார்கள். நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும் என்று கனவு கண்டால், ஜோதிடத்தின் சில சிறப்பு பரிகாரங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்ரீ யந்திர வழிபாடு: திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் ஸ்ரீ யந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அதன் வழிபாடு பலன் தருகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஸ்ரீ யந்திர வழிபாடு நிதி நெருக்கடிகளை நீக்க மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீ யந்திரத்தை வழிபடுவதற்காக, வீட்டின் பூஜையறையில் ஒரு சிவப்பு நிற துணியின் மீது ஸ்ரீ யந்திரத்தை வைக்கவும். பிறகு அதன் மீது கங்கையின் நீர் மற்றும் பால் தெளிக்கவும். வழிபட்ட பிறகு, பெட்டகம், அலமாரி அல்லது கடையில் இந்த யந்திரத்தை வைக்கவும். இது ஏழ்மையை நீக்குகிறது. ஸ்ரீ யந்திரத்தின் முன் நெய் தீபம் ஏற்றிய பிறகு மந்திரங்களை உச்சரிக்கவும்.
ALSO READ | இந்த தேதியில் பிறந்தவரா நீங்கள்? புத்திசாலி! நன்றாக பணம் சம்பாதிப்பவர்!
ஸ்ரீ யந்திரத்தின் முக்கியத்துவம்
தென்னிந்தியாவின் திருப்பதி ஏழுமலையான் (Tirupati Temple) கோயிலிலும் ஸ்ரீ யந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அதன் வழிபாடு மிகவும் பலன் தருவது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ யந்திரத்ம் இருக்கும் இடம் செல்வ செழிப்புடன் இருக்கும். கோவிலில் வைத்து ஆகம முறைப்படி வழிபாடு நடப்பதால், உலகின் பணக்கார கோவிலாக இன்றும் திருப்பதியே முன்னணியில் இருக்கிறது.
ஸ்ரீ யந்திர பூஜை மந்திரம்
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் ஶ்ரீம் நமஹ்
-ஓம் ஸ்ரீ ஹ்ரீம் ஸ்ரீ கமலே கமல்லயே ப்ரஸித் ப்ரஸித் ஸ்ரீ ஹ்ரீம் ஸ்ரீ ஓம் மஹாலக்ஷ்ர்ம்யை நம:
இந்த மந்திரத்தை சொல்லி பூஜை செய்யவும்.
ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!
ஸ்ரீ யந்திர பூஜையைத் தவிர இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்
முறைப்படி செய்யப்பட்ட ஸ்ரீ யந்திரத்தை மட்டுமே வழிபட வேண்டும், பெயருக்காக ஏதாவது ஒரு யந்திரத்தை வழிபட்டால் பலன் கிடைக்காது.
ஸ்ரீ யந்திரத்தை நிறுவிய பின், மந்திரத்தை உச்சரிப்பதை தவறாமல் செய்ய வேண்டும்.
ஸ்ரீ யந்திரத்தை நிறுவிய பிறகு, வீட்டில் மது மற்றும் இறைச்சி பயன்படுத்தக்கூடாது.
நல்ல நேரத்தில் ஸ்ரீ யந்திரத்தை நிறுவுவது அவசியம் என்பதால், யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதற்கு முன்னதாக நேரம் காலம் பார்த்துக் கொள்ளவும்.
READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR