Numerology: இந்த தேதியில் பிறந்தவரா நீங்கள்? புத்திசாலி! நன்றாக பணம் சம்பாதிப்பவர்!

ஒருவரின் பிறந்த தேதிக்கும் அவரது வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு தொடர்பு உள்லது என்பது உண்மை. எண் கணிதத்தில், 1 முதல் 9 வரையிலான அனைத்து ரேடிக்ஸ் எண்களின் பண்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன

Written by - ZEE Bureau | Last Updated : Nov 27, 2021, 05:55 AM IST
  • இது நியூமராலஜி சொல்லும் பலன்கள்
  • பிறந்த தேதி செல்லும் கணிப்பு
  • உங்கள் ரேடிக்ஸ் எண் என்ன?
Numerology: இந்த தேதியில் பிறந்தவரா நீங்கள்? புத்திசாலி! நன்றாக பணம் சம்பாதிப்பவர்!

புதுடெல்லி: ஜோதிடம் போலவே, எண் கணிதத்திலும் ஒருவரின் பிறந்த தேதியின் மூலம் அவரது குணாதிசயங்களை அறிய முடியும். ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் ராசியின் அடிப்படையில் பலன்களை சொல்வதுபோல,  எண் கணிதத்தில் நபரின் ரேடிக்ஸ் (radix) இதைப் பற்றி கூறுகிறது. எண் கணிதத்தில் 1 முதல் 9 வரை ரேடிக்ஸ் உள்ளன. இந்த ரேடிக்ஸ் என்பது பிறந்த தேதியின் கூட்டுத்தொகையாகும். உதாரணமாக,  15 ஆம் தேதி பிறந்தவருக்கு ரேடிக்ஸ் எண் 6 (1+5). எந்த ரேடிக்ஸ் எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள், அதிக பணம் சம்பாதிப்பவர்கள் என்பது தெரியுமா?
 
பிறந்த மாதம் எதுவாக இருந்தாலும் சரி,  5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண் 5 ஆகும். எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 5 (Radix Number) உள்ளவர்கள் பிறக்கும்போதே அறிவாளிகள்.  அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தைபயன்படுத்தி நன்றாக பணம் சம்பாதிப்பார்கள்.  

புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிக்கும் இவர்கள், ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதுமட்டுமின்றி, அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமையால், மிகுந்த மரியாதையையும் பெறுபவர்கள் 5 என்ற ரேடிக்ஸ் எண்ணில் பிறந்தவர்களே... அதிர்ஷ்டத்தை விட கர்மாவை அதிகம் நம்பும் இவர்கள், வாழ்க்கையில் சவால்களை ஏற்று சமாளிப்பதை மிகவும் விரும்புவார்கள்.

ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும்  5 ராசிக்காரர்கள்!

வாழ்நாள் முழுவதும் பணம் செலவழிப்பார்கள்
5 என்ற ரேடிக்ஸ் எண்ணில் பிறந்தவர்கள் புத்திசாலிகள் (Born Intelligent) என்பது மட்டுமல்ல, பண விஷயத்திலும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு கஷ்டப்படமாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, அவர்களிடமிருக்கும் பணத்தால் அல்ல, குணத்தால் என்பதை சிறப்பாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாக பெரிய தொழிலதிபர்களாக இருக்கும் இவர்கள், வேலையில் இருந்தாலும் உயர் பதவியில் இருப்பார்கள்.

வசீகரமான ஆளுமை கொண்ட இவர்கள், எப்போதும் ஈர்ப்பின் மையமாக இருப்பார்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் பேசும் இவர்களை சுற்றி குதூகலம் குடியிருக்கும்.  முகத்தில் சோகமோ வருத்தமோ இல்லமால் இருப்பது எப்படி என்பதை இவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய இவர்கள், காதல் வாழ்க்கையில் மட்டும் கொஞ்சம் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.)

READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News