Driving Rules for Juvenile: சாலை போக்குவரத்து விதிகளை ஒவ்வொரு குடிமகனும் கடைபிடிக்க வேண்டும். மற்ற நாடுகளில் இருப்பதுபோல் இந்தியாவிலும் சாலைப்போக்குவரத்து விதிகள் மிக கடுமையாக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே வாகனம் ஓட்டுவதற்கு தகுதியானவர்கள். அதற்கு முன்பாக வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமாகும். அண்மைக்காலமாக சிறார்கள் வாகனம் ஓட்டி அடிக்கடி விபத்துகளை சந்திப்பதை பார்க்க முடிகிறது. ஆபத்தின் வீரியம் அறியாமல் அவர்கள் வண்டி இயக்குவது, அவர்களுக்கு மட்டுமின்றி சாலை செல்வோருக்கும் மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்திவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ITR Filing AY22-23: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் இதோ


இது குறித்து பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒருவேளை விபத்துகளை அவர்கள் ஏற்படுத்திவிட்டால் மிகக்கடுமையான சட்டப்பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். மிகக் கடுமையான அபராதம் முதல் சிறை தண்டனை வரை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. இதனால், 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் வண்டி ஓட்ட சாவி கேட்டால், பெற்றோர் அதனை நிராகரிக்க வேண்டும். விபத்தில் சிக்கும் சிறார்களுக்கு எந்தவொரு காப்பீடு திட்டமும் பொருந்தாது. வாகனத்திற்கான காப்பீட்டையும் நீங்கள் கிளைம் செய்ய முடியாது. 


அபராதம் 


வாகனம் ஓட்டும் போது குழந்தை பிடிபட்டால், அவரது பெற்றோர் மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையின் பெற்றோருக்கு 25,000 ரூபாய் வரை அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படலாம். இது குறித்து பெற்றோர்கள் அறிந்து, விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. 


கடுமையான விதிகள்


குடிபோதையில் வாகனம் ஓட்டினால், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிக சுமை ஏற்றினால் 20 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை இருக்கிறது. சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஆயிரம் ரூபாய் அபராதம். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் மற்றும் மூன்று மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: இந்த 4 கொடுப்பனவுகள் அதிகரிக்கும், சம்பளம் உயரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ