festive sale: பண்டிகைகால விற்பனையில் சக்கைப் போடு போடும் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள்
பண்டிகை கால விற்பனையின் போது ஐந்து நாட்களுக்குள் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் 3.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்துள்ளன. ரெட்ஸீர் கன்சல்டிங் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி, வால்மார்ட்டுக்கு சொந்தமான அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றின் முதல் சுற்று பண்டிகைக்கு கால விற்பனை 4 பில்லியன் டாலர்களாக இருக்கும் என ரெட்ஸீர்மதிப்பிட்டுள்ளது.
புதுடெல்லி: பண்டிகை கால விற்பனையின் போது ஐந்து நாட்களுக்குள் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் 3.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்துள்ளன. ரெட்ஸீர் கன்சல்டிங் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி, வால்மார்ட்டுக்கு சொந்தமான அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றின் முதல் சுற்று பண்டிகைக்கு கால விற்பனை 4 பில்லியன் டாலர்களாக இருக்கும் என ரெட்ஸீர்மதிப்பிட்டுள்ளது.
'2020 அக்டோபர் 15 முதல் 19 வரை ஆன்லைனில் பண்டிகைக்கால விற்பனை நன்றாகத் தொடங்கியது. வெறும் 4.5 நாட்களில், இ-காமர்ஸ் நிறுவனங்கள் 3.1 பில்லியன் டாலர் அல்லது 22,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்துள்ளன. '
இந்த ஆண்டு ஆன்லைன் விற்பனை சிறப்பாக இருந்தது
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, ஆன்லைன் விற்பனையின் முதல் சில நாட்கள் இந்த ஆண்டு சிறப்பாக இருந்ததாக இந்த அறிக்கை கூறுகிறது. ஆன்லைன் விற்பனைக்கு பல காரணங்கள் உள்ளன.
1. விலை மலிவு
2. கொரோனா நோய்த்தொற்று
3. மொபைல் போன்களுக்கான தள்ளுபடி
மாவ்கரங்களில் இருக்கும் வரவேற்பைப் போலவே இந்த ஆண்டு, வாகரங்களிலும் ஆன்லைன் விற்பனை காளைகட்டிவிட்டது. கொரோனா லாஃடவுனுக்கு பிறகு, பிராண்டுகள் / விற்பனையாளர்கள் தங்கள் நிலையை மேம்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிளிப்கார்ட்டின் விற்பனை அக்டோபர் 16 அன்று தொடங்கி, அக்டோபர் 21 அன்று முடிவடைகிறது. மைந்த்ராவின் (Myntra) 'Big Fashion Festival' அக்டோபர் 16 முதல் 22 வரை என்றால், அமேசானின் (Amazon) 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்' விற்பனை அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு தொடரும். முன்னதாக, அமேசான் இந்தியா இந்த பண்டிகைக்கால விற்பனையின் முதல் 48 மணி நேரத்தில் 1.1 லட்சம் விற்பனை ஆர்டர்களைப் பெற்றுள்ளதாகக் கூறியது. இருப்பினும், எந்த ஈ-காமர்ஸ் நிறுவனமும் விற்பனையின் போது பெறப்பட்ட ஆர்டர்களுக்கான புள்ளிவிவரங்களை வழங்கவில்லை.
1.5 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டன
பண்டிகை விற்பனையின் போது, ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் நாடு முழுவதும் 15 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தை தரவு சேகரிக்கும் நிறுவனமான டெக்ஆர்க் புதன்கிழமை ஒரு அறிக்கையில் இதனைக் கூறியது. அறிக்கையின்படி, இது அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் மதிப்பிடப்பட்ட விற்பனையில் 36 சதவீதத்திற்கும் அதிகமாகும். பிளிப்கார்ட் தனது வருடாந்திர திருவிழா விற்பனையை அக்டோபர் 16 முதல் 21 வரை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அமேசானின் செல் அக்டோபர் 17 முதல் ஒரு மாதத்திற்கு இயக்கப் போகிறது.
2020 ஆம் ஆண்டில் மொத்தம் 128 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் நாட்டில் விற்பனை செய்யப்படும் என்று டெக்ஆர்க் (TechArc) அறிக்கை கூறுகிறது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் மொத்தம் 4.1 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR