புதுடெல்லி: கடந்த சில நாட்களாக, பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வாங்கும் மற்றும் விற்கும் போக்கு தீவிரமடைந்துள்ளது. பலர் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்கின்றனர். ஆனால் சமீபத்தில் இது குறித்து ஒரு முக்கியமான தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன், ஆஃப்லைன் தளங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை (Old Coin) விற்பனை செய்ய மத்திய வங்கியின் பெயர் மற்றும் லோகோவை சில மோசடி நபர்களும் குழுக்களும் பயன்படுத்துகின்றன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


நீங்கள் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை (Old Notes) விற்கும் அல்லது வாங்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், முதலில் ரிசர்வ் வங்கி அளித்த தகவலை சரிபார்க்கவும். ஆன்லைனில் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். ஏமாற்று வேலைக்காக இந்த மோசடி நபர்கள் ஒவ்வொரு நாளும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.


ALSO READ: 2020-21 ஆம் ஆண்டில் போலி ரூ .500 நோட்டுகள் 31% அதிகரித்துள்ளன: கவனமாக இருங்கள்! 


ஆர்பிஐ தனது ட்வீட்டில் என்ன சொன்னது என்று தெரிந்து கொள்ளுங்கள்


ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதாகவும், பல்வேறு ஆன்லைன் ஆப்லைன் தளங்கள் மூலம் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்க கமிஷன் பெறுவதாகவும் எங்களுக்கு தகவல் வந்துள்ளன.” என்று ட்வீட் செய்துள்ளது.


ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில், 'இது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆர்.பி.ஐ ஈடுபடவில்லை. ஆர்.பி.ஐ இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு யாரிடமும் எந்தவொரு கட்டணத்தையும் அல்லது கமிஷனையும் கேட்காது. அதே நேரத்தில், வங்கி அத்தகைய நடவடிக்கைகளுக்கு எந்த நிறுவனத்துக்கும் அல்லது நபருக்கும் எந்தவித அங்கீகாரமும் வழங்கவில்லை’ என்று கூறியுள்ளது.


RBI-க்கு யாரிடமும் எந்த ஒப்பந்தமும் இல்லை


இது போன்ற பரிவர்த்தனைகளில் ஆர்.பி.ஐ. ஈடுபடுவதில்லை. மேலும் யாரிடமும் இது போன்ற கட்டணம் அல்லது கமிஷனையும் வங்கி கேட்காது. ரிசர்வ் வங்கி, “இந்திய ரிசர்வ் வங்கி எந்த அமைப்புக்கும், நிறுவனம் அல்லது தனி நபருக்கும் இது போன்ற பரிவர்த்தனைகளில், ரிசர்வ் வங்கி சார்பாக எந்தவொரு கட்டணத்தையும் கமிஷனையும் வசூலிக்க எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. இது போன்ற போலி மற்றும் மோசடி சலுகைகளின் வலையில் சிக்க வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி பொது மக்களுக்கு அறிவுறுத்துகிறது.” என்று கூறியுள்ளது.


ALSO READ: Rs.500 Rare Note: இந்த 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் ஆயிரக்கணக்கில் அள்ளலாம்!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR