முருங்கை பூவின் ஆரோக்கிய நன்மைகள்: முருங்கை பூக்கள் (Murungai Poo) மற்றும் இலைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதன் நுகர்வு பல வகையான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். முருங்கை பூக்களை சாப்பிடுவதை மக்கள் பெரும்பாலும் புறக்கணிப்பார்கள். மாறாக முருங்கை பூவில் பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பயாடிக், மினரல்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்ற பண்புகள் உள்ளன, இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வாருங்கள் இப்போது முருங்கை பூ சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முருங்கை பூ சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் - Health Benefits of Eating Drumstick Flower in Tamil:


முருங்கை பூக்களில் பொட்டாசியம் சரியான அளவில் உள்ளது, இது சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. முருங்கை பூக்களை சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் கட்டுப்படுத்துகிறது.


மேலும் படிக்க | ஜாக்கிரதை! கண்கள் சிவப்பது ‘இந்த’ கொடிய நோயின் அறிகுறியாக இருக்கலாம்!


* முருங்கைப் பூக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் இது நன்மை பயக்கும். முருங்கை பூவில் நீரிழிவு எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் இருப்பதால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் பிரச்சனையை குறைக்க உதவுகிறது.


* சியாட்டிகா பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற முருங்கை பூவை சாப்பிடலாம். சியாட்டிகாவின் கடுமையான வலியிலிருந்து நிவாரணம் அளிக்க முருங்கை பூ உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி கலவைகள் உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் வலியிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கும் நன்மை பயக்கும்.


* முருங்கை பூ அத்தியாவசிய தாதுக்கள், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இதை உட்கொள்வது எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.



முருங்கை பூக்களை எப்படி சாப்பிடுவது | How to Consume Drumstick Flower in Tamil:


முருங்கை பூ தேநீர்
முருங்கை பூவில் இருந்து தேநீர் தயாரிக்க, பூவை (Drumstick Flower) வெயிலில் காயவைத்து, அதன் பொடியை தயார் செய்யவும். நீங்கள் விரும்பினால், பூக்களை உலராமல் பயன்படுத்தலாம். ஒரு கப் தண்ணீரில் முருங்கைப் பூ அல்லது அதன் பொடியைச் சேர்த்து சூடாக உட்கொள்ளவும்.


முருங்கை பூவை வறுத்து சாப்பிடவும்
முருங்கை பூக்களை பொரியல் செய்தும் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். முருங்கை பூக்களை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து உப்பு நீரில் கொதிக்க வைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, பூக்களை தண்ணீரில் இருந்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இப்போது அதனுடன் முருங்கை பூவை சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து சாப்பிடவும்.


(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.. தொப்பை குறைய இந்த வீட்டு வைத்தியம் மட்டும் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ