ஜாக்கிரதை! கண்கள் சிவப்பது ‘இந்த’ கொடிய நோயின் அறிகுறியாக இருக்கலாம்!

சிலருக்கு காரணமே இன்றி கண்கள் சிவக்கும், இது ஒரு நோய் அறிகுறியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Oct 24, 2023, 07:34 PM IST
  • கண்கள் சிகப்பாக மாறினால் என்ன அர்த்தம்?
  • இது கொடிய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
  • அது என்ன நோய்? அதிலிருந்து தப்பிப்பது எப்படி?

Trending Photos

ஜாக்கிரதை! கண்கள் சிவப்பது ‘இந்த’ கொடிய நோயின் அறிகுறியாக இருக்கலாம்!  title=

கிட்டத்தட்ட நம்மில் பலரும் சிவப்பு அல்லது இரத்தம் படிந்தது போன்ற கண்களால் ஒருமுறையேனும் பாதிக்கப்பட்டிருப்போம். இது, நபருக்கு நபர் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை பொறுத்து பல காரணிகளால் ஏற்படலாம். சில பொதுவான காரணங்களில் சோர்வு அல்லது ஒவ்வாமை ஆகியவை அடங்கும். இருப்பினும், அடிக்கடி கண்கள் சிவப்பதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. இது, ஒரு கொடிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். அந்த நோய்தான், உயர் ரத்த அழுத்தம். 

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்தத்தை Hypertension என்றும் கூறுவார்கள். இதற்கு அர்த்தம், உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்ய உங்கள் இதயம் வழக்கத்தை விட கடினமாக உழைக்கிறது. இது காலப்போக்கில் உங்கள் இரத்த நாளங்களை சேதப்படுத்தும் மற்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கும் வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய எந்த எச்சரிக்கை அறிகுறிகளையும் பலர் கண்டும் காணாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட அறிகுறிகளுள் ஒன்று, கண்கள் சிவப்பது. 

உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்:

உயர் ரத்த அழுத்தம், உங்கள் கண்களின் ரெட்டீனா பகுதியில் உள்ள ரத்த நானங்களை சிதைக்க கூடும். அமெரிகாவில் உயர் ரத்த அழுத்தத்திற்கும் கண்கள் சிவப்பதற்கும் தொடர்பான ஒரு மருத்துவ ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் கண்கள் சிவக்கும் அறிகுறியாக இருக்காது என கூறப்பட்டுள்ளது. ஆனால், உயர் ரத்த அழுத்தத்தால் கண்களில் உள்ள ரத்த நாணங்கள் பாதிக்கப்பட்டு முதலில் பார்வயை மங்க செய்யும், அல்லது பார்வையே சில சமயங்களில் தெரியாமல் போய்விடும் என கூறப்பட்டுள்ளது. கண்களில் இரத்தக் கசிவு ஏற்படுவது உயர் இரத்த அழுத்த ரெட்டினோபதியின் அறிகுறியாக இருக்கலாம், ஏனெனில் இது கண்களில் உள்ள இரத்த நாளங்களை வெடிக்கச் செய்யும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | காலையில் சுடு தண்ணீர் குடிப்பதால் எடை குறையுமா?

உயர் இரத்த அழுத்த ரெட்டினோபதியில் என்ன நடப்பது என்ன?

உயர் இரத்த அழுத்தம் காரணமாக கண்கள் சிகப்பானால், விழித்திரையில் உள்ள இரத்த நாளங்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக மாறும். இந்த செல்கள், ஒன்றை ஒன்று தள்ளிக்கொள்ளூம்.  இந்த நிலை மோசமடையும் போது, சில இரத்த நாளங்கள் கசிய ஆரம்பிக்கும், இது சில இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். இது முழு அளவிலான பார்வை சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தின் பிற அறிகுறிகள்:

கண்கள் சிவப்பாக மாறுவது மட்டுமன்றி இன்னும் சில அறிகுரிகளும் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கின்றன. மங்கலான பார்வை, மூக்கில் இருந்து ரத்தம் வழிதல், மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, மயக்கம், தலைசுற்றல் மற்றும் அடிக்கடி தலைவலி வருவது போன்றவையும் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாகும். 

High Blood Pressure

உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுப்பது எப்படி? 

உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுப்பதற்கு, அது  தொடர்புடைய ஆபத்து காரணிகள் மற்றும் அதன் சிக்கல்கள் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.  அதிக எடை கொண்டவர்கள், புகைபிடிப்பவர்கள் அல்லது மது அருந்துபவர்கள் ஆகியோர்தான் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. வயது அடிப்படையில் பார்த்தால், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். இதை தவிர, உயர் இரத்த அழுத்த நோய் பாதிப்பு, மரபியல் மூலமாக வரக்கூடிய நோயாகவும் பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வாழ்க்கை முறை, போதுமான உடற்பயிற்சி இல்லாமை, பழங்கள் அல்லது காய்கறிகள் சாப்பிடாதது போன்ற உணவு காரணிகளும் அடங்கும். உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வதும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 3 வாரங்களில் 10 கிலோ எடை குறைப்பது எப்படி? இதோ சில சிம்பிள் டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News