Buy Now Pay Later Offer: பண்டிகை காலங்களில், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள், ஷாப்பிங்கில்,  ‘பை நவ் பே லேட்டர்’, அதாவது, 'இப்போது வாங்கி பின்னர் பணம் செலுத்தும்’ வசதியை வழங்குகின்றன. இந்த வசதி சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டது. பெரும்பாலான வணிகர்கள் இந்த விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
 
'பை நவ் பே லேட்டர்' வசதியின் கீழ், நிறுவனங்கள் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கின்றன. கிரெடிட் கார்டு இல்லாதவர்கள் மற்றும் திடீரென ஏதாவது பொருளை வாங்க வேண்டியவர்களுக்கு இந்த வசதி பலன் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'பை நவ் பே லேட்டர்’ என்றால் என்ன?
1. உங்களிடம் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம்
2. இ-காமர்ஸ் நிறுவனங்களில் இந்த வசதி உள்ளது
3. குறுகிய கால கடன்
4. கிரெடிட் கார்ட் (Credit Card) வசதி, கிரெடிட் கார்டை விட மலிவான கடன்
5. மொத்த தொகையில் ஒரு சிறிய கட்டணம்
6. குறுகிய காலத்திற்கு கட்டணம் இல்லை, குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வட்டி
7. BPNL குறைந்த விலை மற்றும் அதிக வசதி
8. மொத்த தொகை அல்லது EMI யில் செலுத்தலாம்
9. வாங்கிய நாளிலிருந்து அடுத்த 14 முதல் 20 நாட்களில் பணம் செலுத்தும் வசதி
10. சரியான நேரத்தில் வட்டி (Interest) செலுத்தப்படாவிட்டால் 24% வரை வட்டி
11. EMI வசதியில் கட்டணம் செலுத்தப்படுவதால் வாடிக்கையாளருக்கு எந்த சுமையும் வராது
12. இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஃபின்டெக் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.


ALSO READ: இனி கனவு இல்லம், வாகனம் சாத்தியமே; வட்டி விகிதத்தை ‘இந்த’ வங்கி குறைத்துள்ளது..!!


'பை நவ் பே லேட்டர்’ வசதி
1. வங்கிகள், 20 க்கும் மேற்பட்ட ஃபின்டெக் நிறுவனங்கள் இந்த வசதியை வழங்குகின்றன.
2. 2025 க்குள், பிஎன்பிஎல் சந்தை 7.41 லட்சம் கோடியாக இருக்கும்
3. இ-காமர்ஸில் (E-Commerce) சந்தை பங்கு 2024 க்குள் 3%-லிருந்து 9% ஆக உயரும்.
4. உணவு, பயணம், மளிகை மற்றும் பிற தளங்களிலும் இது பிரபலமாக இருக்கும்.
5. கிரெடிட் கார்டுக்கு மாற்றாக 'பை நவ் பே லேட்டர்' வசதி இருக்கும்.


  கிரெடிட் கார்ட் பி.என்.பி.எல்
இந்த காலம் வரை வட்டி கட்ட வேண்டாம்  45 நாட்கள் 15 - 20 நாட்கள்
தாமத கட்டணத்துக்கு வட்டி வரம்பு 40-48% 20-30%
வரம்பு எந்த வரம்பும் இல்லை 2 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை
வெளியீட்டு செயல்முறை கிரெடிட் ஸ்கோர், வருமான ஆதாரம் கிரெடிட் ஸ்கோர், வருமான ஆதாரம் தேவையில்லை
எங்கு ஏற்கப்படும் அனைத்து இடங்களிலும் ஏற்கத்தக்கது தேர்ந்தெடுக்கப்பட்ட டீள்களில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது

ALSO READ: Diwali Bonus: ஊழியர்களின் தீபாவளி போனஸ் குறித்த முக்கிய தகவல்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR