இனி கனவு இல்லம், வாகனம் சாத்தியமே; வட்டி விகிதத்தை ‘இந்த’ வங்கி குறைத்துள்ளது..!!

உங்கள் கனவு இல்லத்தை வாங்குவதும், வாகனம் வாங்குவதும் எளிது. ஏனெனில்,  இப்போது நீங்கள் மலிவாக கடன் பெறலாம். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 18, 2021, 12:45 PM IST
  • இப்போது கனவு வீடு மற்றும் வாகனம் வாங்குவது எளிது
  • பேங்க் ஆப் இந்தியா வீடு, வாகனக் கடன்களை மலிவாக வழங்குகிறது
  • வங்கி இன்னும் பல சலுகைகளையும் வழங்குகிறது.
இனி கனவு இல்லம், வாகனம் சாத்தியமே;  வட்டி விகிதத்தை ‘இந்த’ வங்கி குறைத்துள்ளது..!!

புதுடெல்லி: நீங்கள் வீட்டிற்கு வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா...  உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனென்றால் இப்போது நீங்கள் மலிவாக கடன் பெறலாம். முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியா (BOI) தனது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது, இப்போது உங்கள் கனவுகளின் வீட்டை குறைந்த வட்டியில் பெறலாம். இதுமட்டுமின்றி, வங்கி வாகன கடனுக்கான வட்டி விகிதத்தையும் 0.50 சதவீதம் குறைத்துள்ளது.

வங்கி அளித்த தகவல்

இந்த தகவலை வங்கியே தெரிவித்துள்ளது. வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, 'இந்த வட்டி விலக்குக்குப் பிறகு, BOI இன் வீட்டுக் கடன் விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து தொடங்கும். முன்பு வீட்டு கடன் சதவிகிதம் 6.85 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், வங்கியின் வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் 7.35 லிருந்து 6.85 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ALSO READ | Jackpot! இந்த '2' ரூபாய் நாணயம் இருந்தால், நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்..!!

வட்டி மீதான சிறப்பு சலுகை

இந்த சிறப்பு வட்டி விகிதம் அக்டோபர் 18, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை பொருந்தும் என்று வங்கி மேலும் தெரிவித்துள்ளது. புதிய கடன் அல்லது கடன் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வட்டி விகிதம் பொருந்தும்.

இதனுடன் வங்கி டிசம்பர் 31, 2021 வரை வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் மீதான பிராஸசிங் கட்டணத்தை ரத்து செய்துள்ளது. அதாவது, இப்போது வங்கியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, வீடு மற்றும் கார் இரண்டையும் எடுத்துக்கொள்வது மிகவும் சிக்கனமானதாக ஆகி விட்டது.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தில் பம்பர் செய்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News