EPFO New Rule: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கு வைத்திருப்பவர்களுக்கான விதிகளில் EPFO சில மாற்றங்களைச் செய்துள்ளது, அவை ஜூன் 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. நீங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் மாத சம்பளம் வாங்கும் ஊழியராக இருந்தால், இந்த மாற்றத்தை கவனமாக புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இது உங்கள் பண வரவு செலவை நேரடியாக பாதிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பி.எஃப் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டியது அவசியம்


EPFO இன் புதிய விதிகளின்படி, EPFO-ல் ​​கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் UAN எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும். தங்கள் ஊழியர்கள் ஆதாருடன் பி.எஃப் கணக்கை இணைத்து விட்டார்களா என்பதை சரிபார்க்க வேண்டியது முதலாளிகள் / நிறுவனங்களின் பொறுப்பாகும். இல்லையெனில், பி.எஃப் கணக்கில் வரும் ஊழியரின் முதலாளியின் / நிறுவனத்தின் பங்களிப்பு நிறுத்தப்படக்கூடும். மேலும், கணக்கு வைத்திருப்பவர் தனது பி.எஃப் கணக்கிலிருந்து தொகையை எடுக்கவும் முடியாது.


புதிய விதி என்ன?


சமூக பாதுகாப்பு கோட் (Social Security Code) 2020 இன் பிரிவு 142 இன் கீழ் புதிய விதிகளை EPFO நடைமுறைப்படுத்தியுள்ளது. ஜூன் 1 முதல், ஊழியர்களின் பிஎஃப் கணக்கு ஆதாருடன் (Aadhaar) இணைக்கப்படவில்லை என்றால், அல்லது யுஏஎன் ஆதார் சரிபார்ப்பு இல்லை என்றால், அதன் ஈசிஆர்-எலக்ட்ரானிக் சலான் கம் ரிட்டர்ன் (Electronic Challan cum Return) நிரப்பப்படாது என்று EPFO முதலாளிகள் / நிறுவனங்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.


ALSO READ:  PF Good news: கோவிட் முன்பணம் எடுக்க அரசு அனுமதி, இந்த முறையில் எளிதாக எடுக்கலாம்!!


7 லட்சம் EDLI கவர் கிடைக்காது
 இதன் பொருள் என்னவென்றால், எந்த EPFO சந்தாதாரரின் யுஏஎன் ஆதார் உடன் இணைக்கப்படவில்லையோ, அவருக்கு முதலாளி / நிறுவனத்தின் PF பங்களிப்பு கிடைக்காது. ஊழியர்களின் கணக்கில் அவர்களது பங்களிப்பு மட்டும்தான் இருக்கும். இந்த சூழலில் ஊழியரின் பணியாளர் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீடையும் (EDLI) டெபாசிட் செய்ய முடியாது. அந்த ஊழியருக்கு EDLI திட்டத்தின் பாதுகாப்பும் (Scheme cover) கிடைக்காது.


கொரோனா தொற்றுநோய்க்கு (Coronavirus) மத்தியில், ஈ.டி.எல்.ஐ திட்டத்தின் கீழ் இறப்பு காப்பீட்டு சலுகையின் அளவை அரசாங்கம் ரூ .7 லட்சமாக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், ​​குறைந்தபட்சம் ரூ .2 லட்சம் மற்றும் அதிகபட்சம் ரூ .6 லட்சம் கிடைத்தது. இது அரசாங்கத்தால் குறைந்தபட்சம் ரூ .2.5 லட்சமாகவும் அதிகபட்சமாக ரூ .7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


ஈபிஎஃப் கணக்கை ஆதார் உடன் இணைப்பது எப்படி?


நீங்கள் இன்னும் உங்கள் பிஎஃப் கணக்கை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், ஈபிஎஃப்ஒ-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, முதலில் உங்கள் கணக்கை ஆதார் அட்டையுடன் இணைக்கவும். மேலும் உங்கள் யுஏஎன்-ஐ ஆதாருடன் வெரிஃபை செய்யவும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் கணக்கில் பிஎஃப் பங்களிப்பு முன்பு போல் எந்த தடையும் இல்லாமல் வந்த வண்ணம் இருக்கும். 


1. முதலில் நீங்கள் EPFO ​​வலைத்தளமான www.epfindia.gov.in இல் லாக் இன் செய்ய வேண்டும்.


2. இதற்குப் பிறகு, Online Services-ல் சென்று, e-KYC போர்ட்டலைக் கிளிக் செய்து, பின்னர் UAN aadhar-ஐ கிளிக் செய்யவும். 


 


3. நீங்கள் உங்கள் UAN எண் மற்றும் UAN கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவேற்ற வேண்டும்.


4. உங்கள் மொபைல் எண்ணில் OTP எண் வரும்.


5. உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை ஆதார் பெட்டியில் உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்


6. பின்னர் Proceed to OTP verification என்று வரும். அதை கிளிக் செய்யவும். 


7. ஆதார் விவரங்களை மீண்டும் சரிபார்க்க, ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது மின் அஞ்சலில் OTP உருவாக்கப்பட வேண்டும்.


8. சரிபார்ப்பிற்குப் பிறகு, உங்கள் ஆதார் உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்படும்.


ALSO READ: EPFO Alert: PF அக்கவுண்ட் இருக்கா, அப்போ இதை உடனே செஞ்சிடுங்க


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR