கண்ணாமூச்சி காட்டும் கொரோனா: குறையும் தொற்று; எகிறும் இறப்பு எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போதிலும், இறந்தவர்களின் எண்ணிக்கை இது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 11, 2021, 03:48 PM IST
கண்ணாமூச்சி காட்டும் கொரோனா: குறையும் தொற்று; எகிறும் இறப்பு எண்ணிக்கை title=

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போதிலும், இறந்தவர்களின் எண்ணிக்கை இது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 93 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், ஒரு நாளில் பதிவான இறப்பு எண்ணிக்கை, இது வரை இல்லாத அளவிற்கு 6138 அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 93 ஆயிரம் 896 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 6138 அதிகரித்துள்ளது. இதை அடுத்து, இந்தியாவில் மொத்த கொரோனா தொற்று  எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்தி 82 ஆயிரத்தி 72 ஆக உள்ளது. இறப்பு எண்ணிக்கை, 3 லட்சத்தி 59 ஆயிரத்தி 695 ஆக உள்ளது

பீகாரில் கோவிட் -19 இறப்புகளின் எண்ணிக்கை புதன்கிழமை மாநில சுகாதாரத் துறை திருத்தியது இரப்பு எண்ணிக்கை இந்த அளவிற்கு அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. இது தொற்றுநோயால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 9,429 என பதிவு செய்யப்பட்ட நிலையில், முந்தைய நாள் வரை 5,500 க்கு கீழ் என இருந்த இறப்புகளின் எண்ணிக்கையை, திருத்தி மேலும் 3,951 இறப்புகள் சேர்க்கப்பட்ட நிலையில், புதிய இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் கூறியது. 

ALSO READ | Covaxin Vs Covishield: ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்கள்

கோவிட் -19 தொற்று புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால், தொடர்ந்து 28 வது நாளாக குனமடைந்த  நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளனர். இத அடுத்து, இந்தியாவில் கோவிட் -19 ல் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,76,38,902 ஆக உயர்ந்துள்ளது. இதனுடன், நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையிலும் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது தற்போது, 11,83,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, தமிழ்நாட்டில் 17,321 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,92,025 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்ற்ய் ஒரே நாளில்  1,345 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 405 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 28,170 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ | COVID-19 Vaccine: கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான வழிமுறைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News