வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) சேமிப்பு என்பது தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் நிதிப் பாதுகாப்பிற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஓய்வூதிய திட்டங்களை நிர்வகிக்கிறது. இபிஎஃப்ஓ அவ்வப்போது பல வித புதுப்பிப்புகளை தனது சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மாதமும் ஒரு ஊழியர் தனது PF கணக்கில் செலுத்தும் தொகையானது, ஓய்வூதியம் பெறுவதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதியத்துடன் பணியாளரின் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. ஊழியர் மற்றும் முதலாளி / நிறுவனம் இருவரும் ஒவ்வொரு மாதமும் EPF -க்கு சமமான தொகையை வழங்குகிறார்கள். முதலாளி / நிருவனத்தின் பங்களிப்பிலிருந்து ஒரு பங்கு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) டெபாசிட் செய்யப்படுகிறது.


EPFO ஓய்வூதியத் தொகையை எவ்வாறு கணக்கிடுகிறது?


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கை பராமரித்தல் மற்றும் சரியான நேரத்தில் ஓய்வூதியங்களை வெளியிடுவது ஆகியவை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) பொறுப்பாகும். கணக்கு வைத்திருப்பவரின் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள, ஊழியர் தனது பணிக்காலத்தில் EPF க்கு எவ்வளவு பங்களிப்பு செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும். 


முதலாளி / நிறுவனங்கள் பணியாளரின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீதத்தை அகவிலைப்படியுடன் பிடித்தம் செய்து, ஒவ்வொரு மாதமும் அவர்களது EPF கணக்கிற்கு மாற்றுவார்கள். முதலாளி / நிறுவனமும் சமமான தொகையை வழங்குகிறார்கள். திரட்டப்பட்ட நிதியானது பணியாளரிடம் ஓய்வு பெறும் போது அல்லது அவர் இறந்தால் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.


முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பிலிருந்து, 8.33 சதவீதம் இபிஎஸ்-க்கு செல்கிறது, மீதமுள்ள தொகை இபிஎஃப்-ல் டெபாசிட் செய்யப்படுகிறது. இபிஎஸ் உறுப்பினராக 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஒருவர் ஓய்வூதியம் பெற உரிமை பெறுகிறார். ஓய்வூதியத்திற்குப் பிறகு பணியாளரின் கணக்கில் மாற்றப்படும் ஓய்வூதியம் பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படும்.


மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x ஓய்வூதியம் பெறுவதற்கான சேவை காலம்)/70


மேலும் படிக்க | EPFO மகிழ்ச்சியான அப்டேட்: ஊழியர்களுக்கு அடித்தது லாட்டரி... கணக்கில் வட்டித்தொகை.. இப்படி செக் செய்யலாம்


ஓய்வூதிய சம்பளம் கடைசி 60 மாதங்களின் சராசரி சம்பளமாக கணக்கிடப்படுகிறது. மறுபுறம், ஓய்வூதிய சேவை என்பது ஒரு ஊழியரின் உண்மையான சேவை காலத்தைக் குறிக்கிறது. ஒருவர் இறக்கும் வரை, ஃபார்முலாவின்படி ஓய்வூதியத் தொகையைப் பெறுகிறார். இருப்பினும், பணியாளர் இறந்த பிறகு, அவரது மனைவி அல்லது குழந்தைகள் (25 வயதுக்குட்பட்டவர்கள்) ஓய்வூதியத் தொகைக்கு உரிமையுடையவர்கள் ஆவார்கள். மேலும், பணியாளர் தனது பணிக் காலத்தில் இறந்தால், வாழ்க்கைத் துணைக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும்.


இதற்கிடையில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தி உள்ளது. மோடி அரசு விரைவில் வட்டிப் பணத்தை கணக்கில் செலுத்த உள்ளதால், ஊழியர்களின் வங்கி கணக்கில் உள்ள தொகை அதிகரிக்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு 2022-2023 நிதியாண்டுக்கு 8.15 சதவீத வட்டி வழங்க முடிவு செய்திருந்தது. இப்போது அனைத்து ஊழியர்களும் தங்கள் கணக்குகளில் இந்த வட்டி தொகை வர காத்திருக்கிறார்கள். மிக விரைவில் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு அரசு இந்த நற்செய்தியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான பிஎஃப் ஊழியர்கள் பயனடைவார்கள். 


மேலும் படிக்க | ஊழியர்கள் கவனத்திற்கு! EPFO கொண்டுவந்துள்ள புதிய நடைமுறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ