இபிஎஃப்ஓ இ-ஸ்டேட்மெண்ட்: இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட வட்டிப் பணம் அடுத்த மாதத்திற்குள் வந்துவிடும். இபிஎஃப்ஓ உடன் தொடர்புடைய ஆதாரங்களின்படி, வட்டிப் பணத்தை ஜூன் 30, 2022-க்குள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், உங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இதுவரை எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது? நீங்கள் டெபாசிட் செய்த நிதியில் எவ்வளவு வட்டி பெற்றுள்ளீர்கள்? இதற்கான விடை உங்களுக்கு தெரியவில்லை என்றால், உங்கள் இபிஎஃப் கணக்கை நீங்கள் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். 


இபிஎஃப் இ-ஸ்டேட்மெண்ட் பல வழிகளில் உதவுகிறது


இபிஎஃப் பாஸ்புக் மூலம், பிரிவு 80C இன் கீழ் மொத்த வருமானத்தில் இருந்து எவ்வளவு விலக்கு பெறலாம் என்பதை அறிந்துகொள்ளலாம். உங்கள் பங்களிப்பில் இந்த கிளெய்மை நீங்கள் செய்யலாம். இபிஎஃப் பாஸ்புக், நீங்களும் உங்கள் நிறுவனமும் செய்த பங்களிப்பின் மூலம், எவ்வளவு தொகை மொத்தமாக கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. 


இபிஎஃப் கணக்கை முந்தைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றவும் இபிஎஃப் பாஸ்புக் உதவுகிறது. இபிஎஃப் பாஸ்புக்கில், பிஎஃப் கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), ஓய்வூதிய திட்ட விவரங்கள், நிறுவனத்தின் பெயர் மற்றும் ஐடி, இபிஎஃப்ஓ ​​அலுவலக விவரங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.


இபிஎஃப் பாஸ்புக்கைப் பெறுவதற்கு இபிஎஃப்ஓ ​​இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். அதற்கான வழிமுறை இதோ



1. https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ க்குச் செல்லவும்
2. 'ஆக்டிவேட் யுஏஎன்' (யுனிவர்சல் அகவுண்ட் நம்பர்) என்பதைக் கிளிக் செய்யவும்.
3. உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். யுஏஎன், ஆதார், பான் மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும். சில தகவல்களை உள்ளிட வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை சிவப்பு நிற நட்சத்திரத்துடன் குறிக்கப்பட்டிருக்கும்.
4. 'கெட் ஆதரைசேஷன் பின்' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். இதில், நீங்கள் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்கும்படி கேட்கப்படுவீர்கள். உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஓடிபி அனுப்பப்படும்.
5. ஓடிபியை உள்ளிட்டு, 'ஓடிபியைச் சரிபார்த்து யுஏஎன் ஆக்டிவேட் செய்' என்பதைக் கிளிக் செய்யவும். யுஏஎன் ஆக்டிவேட் ஆனவுடன் ​​கடவுச்சொல்லுடன் எஸ்எம்எஸ்-ஐ பெறுவீர்கள். உங்கள் கணக்கில் உள்நுழைய இந்தக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். உள்நுழைந்த பிறகு உங்கள் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளலாம்.


இபிஎஃப் அறிக்கையைப் பதிவிறக்கும் முன் நினைவில் கொள்ளுங்கள்: பதிவுசெய்த 6 மணிநேரத்திற்குப் பிறகுதான் பாஸ்புக்கை காண முடியும்



மேலும் படிக்க | New Wage Code: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 3 நாட்கள் வார விடுமுறை, விதிகளில் மாற்றம் 


இபிஎஃப் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்ய இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:


ஸ்டெப்  1: https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp என்ற இணையதளத்திற்குச் செல்லவும். 


ஸ்டெப் 2: யுஏஎன், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். 'லாக்-இன்' என்பதைக் கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 3: லாக் இன் செய்த பிறகு, உங்கள் பாஸ்புக்கைப் பார்க்க உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்.


ஸ்டெப் 4: பாஸ்புக் பிடிஎஃப் வடிவத்தில் இருக்கும். அதை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
விலக்கு அளிக்கப்பட்ட பிஎஃப் அறக்கட்டளைகளின் (எக்ஸெம்ப்டட் பிஎஃப் டிரஸ்ட்) பாஸ்புக்கைப் பார்க்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். அத்தகைய நிறுவனங்கள், பிஎஃப் டிரஸ்டை தாங்களே நிர்வகிக்கின்றன.


ஸ்டெப் 5: உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், கடவுச்சொல்லை மீட்டமைக்கலாம். இதற்கு, இபிஎஃப்ஓ ​​உறுப்பினர் இ-சேவை இணையதளத்திற்கு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) செல்ல வேண்டும். 


மேலும் படிக்க | பணி ஓய்வுக்கு முன் பிஎஃப் தொகையை எடுக்க விதிகள், நிபந்தனைகள் என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR