ஊழியர்களே உஷார்: EPFO ஊதிய வரம்பில் மாற்றம், கையில் கிடைக்கும் சம்பளம் குறையக்கூடும்

EPFO Salary Limit : பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான சம்பள வரம்பு 15 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்தப்படலாம். இந்த மாற்றம் ஏற்பட்டால், வரும் காலங்களில் ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறைக்கப்படலாம்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2022, 01:18 PM IST
  • பிஎஃப் சமபள வரம்பு மாற்றப்படலாம்.
  • இதற்கு அரசாங்க அனுமதி தேவை
  • கடைசி மாற்றம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
ஊழியர்களே உஷார்: EPFO ஊதிய வரம்பில் மாற்றம், கையில் கிடைக்கும் சம்பளம் குறையக்கூடும் title=

இபிஎஃப்ஓ சம்பள வரம்பு உயர்வு: பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPFO) சம்பள வரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்படி நடந்தால், 75 லட்சம் ஊழியர்கள் மீது இதன் விளைவு இருக்கும். 

நிபுணர்களின் கூற்றுப்படி, இபிஎஃப்ஓ-​இன் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு சம்பள வரம்பில் கடைசியாக 2014 இல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த மாற்றத்திற்குப் பிறகு மேலும் பலரை இந்த வட்டத்தின் கீழ் கொண்டு வர சாத்தியப்படும். 

இதன் விளைவு என்னவாக இருக்கும்?
இபிஎஃப்-க்கான சம்பள வரம்பு அதிகரிக்கப்பட்டால், அதன் மூலம், இபிஎஃப்-க்கான பங்களிப்பு அதிகரிக்கக்கூடும், எனினும் இதனால், ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் ஊதியம் குறையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், இறுதியில் அதன் பலன் ஊழியர்களுக்கே கிடைக்கும். 

மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள் 

தற்போது கையில் கிடைக்கும் சம்பளம் குறைந்தாலும், ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் அதன் பலன் கிடைக்கும். இது அவர்களின் சேமிப்பை அதிகரிக்கும். மேலும் இபிஎஸ்-லும் அதிக பங்களிப்பை கிடைக்கும். 

அரசாங்க அனுமதி தேவை
இபிஎஃப்ஓ வாரியம் எடுக்கும் முடிவுக்கு அரசாங்கம் கொடுக்கும் ஒப்புதல் அவசியமாகும். அரசிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்த பிறகே இதை முன்னெடுத்துச் செல்ல முடியும். இந்த முடிவு அரசுக்கு சுமையை ஏற்படுத்தும். இபிஎஃப்ஓ-ன் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்காக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 6,750 கோடி ரூபாய் செலவழிக்கிறது. சம்பள வரம்பை உயர்த்தினால், அதற்கென தனி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கடைசி மாற்றம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது
15,000 ரூபாய்க்கு குறைவான சம்பளம் உள்ளவர்களுக்கு இபிஎஃப் திட்டம் அவசியமாகும். இதில் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 1.6 பங்கை அரசு பங்களிப்பாக வழங்குகிறது. சம்பள வரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்துவதன் மூலம் 75 லட்சம் பணியாளர்கள் பலன் பெறலாம். கடந்த 2014ல் சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News