இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற விங் கமாண்டர் ஜே.பி. பதுனி தனது மனைவியின் நினைவாக ஒரு பள்ளிக்கு ரூ 17 லட்சம் கொடுத்து தனது மனைவியின் தனித்துவமான நினைவுகளை பாதுகாப்பத்து வருவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜே.பி. பதுனேவின் மனைவி 1986 ஆம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாக விமானப்படை கோல்டன் ஜூபிளி இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பள்ளியில் முதன்மை ஆசிரியராக இருந்தார். இந்த வருடம் பிப்ரவரி 6 ஆம் தேதி அவரது மனைவிக்கு (விது பதுனி) ஏற்ப்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் நினைவாக, அவர் பணியாற்றிய பள்ளிக்கு 17 லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார் ஜே.பி. பதுனி.


இதுக்குறித்து பள்ளியின் முதல்வர் எஸ். ராம்பால் கூறுகையில், இந்த தொகையில் 10 லட்ச ரூபாய் கல்வியாண்டில் 5 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் விருது வழங்கப்படும். மீதமுள்ள நன்கொடையை பள்ளி முதன்மை பிரிவு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்" எனக் கூறினார்.


இதுக்குறித்து ஜே.பி. பதுனி கூறுகையில், இந்த பள்ளியில் என் மனைவி பணியாற்றியது மட்டுமில்லாமல், அவரின் முழு அன்பும் இந்த பள்ளி மற்றும் மாணவர்கள் மீதும் தான் இருந்தது. மேலும் நான் கொடுத்த நன்கொடை, என் மனைவி கடந்த காலத்தில் சேமித்து வைத்தது தான்.


இந்த நன்கொடை என் மனைவிக்கு உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் இது தகுதியுள்ள குழந்தைகள் முன்னோக்கி நகர்த்துவதற்கு உதவியாக இருக்கும் எனவும் ஜே.பி. பதுனி கூறினார்.