புதுடெல்லி: நவீன காலத்தில், ஒவ்வொரு நபரும் எதிர்கால பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை நோக்கி பணத்தை செலவழிக்கவே விரும்புகிறார்கள். ஒரு வாகன விபத்து மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விடலாம். எனவே அதற்கான காப்பீடு என்பது இன்றையை காலத்தில் அவசியமானதாகிறது. அதில் சில திட்டங்கள் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என நிரூபிக்கப்பட்டுள்ளன. நீங்களும் அத்தகைய திட்டத்தில் சேர விரும்பினால், இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள அனைத்து அமைப்புகளும் புதிய திட்டங்களை செயல்படுத்தி, பெரிய அளவில் மக்களுக்கு பயனளித்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் சக்திவாய்ந்த நிறுவனங்களில் ஒன்றான தபால் அலுவலகம் தொடர்ந்து பல திட்டங்களைக் கொண்டு வருகிறது, ஆனால் இப்போது விபத்து தொடர்பான திட்டம்பெரிய அளவில் கவனத்தில் கவர்ந்துள்ளது. இந்த திட்டத்தின் வாகனத்தில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால், உங்கள் சிகிச்சை முற்றிலும் இலவசம்.


அஞ்சலத்தின் விபத்துக் காப்பீட்டில் லட்ச ரூபாய்க்கான பலன் கிடைக்கும்


நாட்டின் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் ஒன்றான தபால் அலுவலகத்தின் காப்பீட்டு திட்டத்தில், உங்களுக்கு பெரிய அளவிலான காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது, அதில் சேருவதன் மூலம் உங்கள் சிகிச்சையை இலவசமாகப் பெறலாம். இந்தத் திட்டத்தின் பெயர் ஆக்சிடென்டல் க்ரூப் பாலிசி. இதில் நீங்கள் முதலில் சிறிய அளவிலான பிரீமியத்தைச் செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு, அதில் பம்பர் பலன்கள் கிடைக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், மாஸ் செய்தி


இந்த போஸ்ட் ஆபீஸ் பாலிசியில், ஒரு நபர் ரூ.299 மற்றும் ரூ.399 பிரீமியம் செலுத்தினால் ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார். ஒவ்வொரு வருடமும் இன்ஷூரன்ஸ் பாலிசியை புதுப்பித்துக்கொள்வது அவசியம், இதற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பதும் அவசியம். பாலிசியின் கீழ், IPD செலவுக்கு 60 ஆயிரம் ரூபாயும், விபத்துக்குப் பிறகு காயம் ஏற்பட்டால் OPD க்கு 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.


பாலிஸியில் கிடைக்கும் பம்பர் பலன்கள்


டாடா ஏஐஜியுடன் இணைந்து தபால் துறை இந்த விபத்துக் காப்பீட்டு பாலிஸியைக் கொண்டு வந்துள்ளது. இது இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒன்றில், நீங்கள் ஆண்டுக்கு ரூ.299 பிரீமியம் செலுத்த வேண்டும். இதில், இரண்டாவது திட்டத்தில் ரூ.399 செலுத்த வேண்டும்.


மறுபுறம், ஒருவர் ரூ.299 திட்டத்தைத் தேர்வுசெய்தால், ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இது மட்டுமின்றி, காப்பீடு செய்யப்பட்ட நபர் விபத்தில் பலியாகிவிட்டால், இந்த பாலிசியில் அவருக்கு மருத்துவமனையில் சேர்க்கும் செலவும் வழங்கப்படுகிறது. IPD செலவுகள் ரூ 60,000 மற்றும் OPD க்ளைம்கள் ரூ 30,000 வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும்.


 விபத்தில் துரதிர்ஷ்டவசமாக இறந்து விட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு தபால் நிலையத்தின் நிதியுதவியாக ரூ.10 லட்சம் பலன் அளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, காப்பீடு செய்தவர் விபத்தில் ஊனமடைந்தாலும், அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலே உள்ள அனைத்து பலன்களும் ரூ.399 திட்டத்தில் கிடைக்கும். இதனுடன், பாதிக்கப்பட்டவரின் இரண்டு குழந்தைகளின் கல்விக்காக ரூ.1 லட்சம் உதவி வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | வெறும் ரூ.19,500 விலையில் அறிமுகமானது ஜியோ லேப்டாப்! இத்தனை சிறப்பம்சங்களா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ