வெறும் ரூ.19,500 விலையில் அறிமுகமானது ஜியோ லேப்டாப்! இத்தனை சிறப்பம்சங்களா?

Reliance Jio Laptop: ஜியோ லேப்டாப் 2ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் கொண்டுள்ளது, ரேம் 32ஜிபி eMMC ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jan 20, 2023, 11:04 AM IST
  • மலிவு விலையில் கிடைக்கும் ஜியோ லேப்டாப்.
  • 6வது எடிஷனை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
  • 11.6 இன்ச் ஹெச்டி எல்இடி டிஸ்பிலே உடன் வருகிறது.
வெறும் ரூ.19,500 விலையில் அறிமுகமானது ஜியோ லேப்டாப்! இத்தனை சிறப்பம்சங்களா? title=

Reliance Jio Laptop: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த நிலையில் தற்போது நாட்டில் தனது நிறுவனத்தின் முதல் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த லேப்டாப் ஏற்கனவே விற்பனைக்கு வந்தாலும் எல்லா தரப்பினராலும் வாங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. அரசாங்கத் துறைகள் மட்டுமே GeM போர்ட்டல் வழியாக ஷாப்பிங் செய்ய முடியும் என்று நிலை இருந்து வந்தது. விரைவில் இது பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஜியோபுக் ஏற்கனவே இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC), 2022-ன் 6வது எடிஷனை காட்சிக்கு வைத்துள்ளது.

மேலும் படிக்க | Fake ChatGPT: இந்த செயலிகள் போலியானவை.. பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

அரசாங்கத்தின் இ-மார்க்கெட்பிளேஸ் இணையதளத்தில் ஜியோ நிறுவனத்தின் லேப்டாப் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  லேப்டாப் குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 665 ஆக்டா-கோர் ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.  இது ஒரு நிலையான ஃபேக்டர் மற்றும் மெட்டாலிக் ஹிங்க்ஸ் உடன் வருகிறது.  இதிலுள்ள சேஸிஸ் ஏபிஎஸ் பிளாஸ்டிக்கால் ஆனது மற்றும் லேப்டாப் நிறுவனத்தின் சொந்த ஜியோ ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.  ஜியோ லேப்டாப் 2ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் கொண்டுள்ளது, ரேம் 32ஜிபி eMMC ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

jio

ஜியோ லேப்டாப்பில் 11.6 இன்ச் ஹெச்டி எல்இடி பேக்லிட் ஆன்டி-க்ளேர் டிஸ்ப்ளே உள்ளது மற்றும் 1366×768 பிக்சல்கள் ரிசல்யூஷனை கொண்டுள்ளது.  சாதனத்தில் உள்ள போர்ட்களில் யூஎஸ்பி 2.0 போர்ட், யூஎஸ்பி 3.0 போர்ட் மற்றும் ஹெச்டிஎம்ஐ போர்ட் ஆகியவை அடங்கும்.  இதில் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் எதுவும் இல்லை மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது.  இந்த லேப்டாப்பில் வயர்லெஸ் இணைப்பு வைஃபை 802.11ac ஆல் ஆதரிக்கப்படுகிறது.  இதிலுள்ள புளூடூத் இணைப்பு 5.2 உடன் வருகிறது மற்றும் 4ஜி மொபைல் பிராட்பேண்ட் இணைப்பையும் ஆதரிக்கிறது.  ஜியோ லேப்டாப்பில் இரட்டை உள் ஸ்பீக்கர்கள் மற்றும் இரட்டை மைக்ரோபோன்கள் உள்ளது.  இதில் கைரேகை ஸ்கேனர் இல்லை.  மேலும் பேட்டரியைப் பொறுத்தவரை, ஜியோ லேப்டாப் 55.1-60Ah பேட்டரி திறன் கொண்டது.  சாதனத்தின் எடை 1.2 கிலோ மற்றும் ஒரு வருட பிராண்ட் உத்தரவாதத்துடன் வருகிறது.

மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் வாங்க போறிங்களா? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News