ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்களின் ராசிகள் மாறப்போகின்றன. 18 மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதி ராகு-கேது ராசி மாறப் போகிறார்கள். இந்த மாதத்தில் சனி பகவான் மகர ராசியில் நுழைவார். அதே நேரத்தில் தேவகுரு பிருஹஸ்பதியும் இந்த மாதத்தில் மீன ராசியில் பிரவேசிக்க உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்குப் பிறகு சுக்கிரனும் சூரியனும் ஏப்ரல் மாதத்தில் ராசி மாறவுள்ளார்கள். இந்த அனைத்து கிரகங்களின் ராசி மாற்றத்தின் பலன்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மங்களகரமானதாக இருக்கப் போகிறது. இந்த மாதத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், பணியில் இருப்பவர்களுக்கு வருமானத்திற்கான பல வழிகள் திறக்கும், பண வரவு அதிகமாகும். இந்த காலகட்டத்தில் அரசுத் துறையில் இருப்பவர்கள் பலன் பெறலாம். பல வழிகளில் லாபம் காண்பீர்கள். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் மிகவும் சாதகமாக இருக்கும்.


மகரம்: வரும் மாதம் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். இந்த காலகட்டத்தில் பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் மகர ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். 


மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் முன்னேற்றப் பாதைகள் திறக்கும். இந்த நேரம் முதலீடு செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.


மேலும் படிக்க | புதனின் ராசி மாற்றம் இந்த 6 ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது: உங்க ராசி என்ன? 


கும்பம்: கும்ப ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். ஏப்ரல் மாதம் பண விஷயத்தில் நல்லதாக இருக்கும். இந்த மாதம் தொடர்ந்து பணவரவு இருக்கும். 


எதிர்பார்க்காத பல இடங்களில் இருந்தும் பண வரவு இருக்கும். தடைபட்ட வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத் துறையில் பொருளாதார அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் முதலீடு செய்வதால் லாபம் கிடைக்கும்.


மீனம்: நிதி ரீதியாக ஏப்ரல் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நீண்ட நாட்களாக கிடைக்காமல் சிக்கியிருந்த பணம் இந்த காலத்தில் கிடைக்கும். 


வியாபாரத்தில் லாபம் கூடும். தனியார் துறையுடன் தொடர்புடைய மீன ராசிக்காரர்கள் ஆதாயம் பெறலாம். அரசு வேலை செய்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். முதலீடு செய்ய இது நல்ல நேரமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR