சூரிய தேவனின் அருளால் மகிழ்ச்சி கடலில் நீந்த போகும் ‘3’ ராசிகள்..!!

சூரிய பகவான் தற்போது மீன ராசியில் இருக்கிறார். மீனத்தில் வசிக்கும் சூர்ய தேவன் சில ராசிக்காரர்களுக்கு விசேஷமாக பலன்களை அள்ளித்தருகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2022, 06:46 PM IST
  • சூரியனின் அருளால் பிரகாசிக்க போகும் ராசிகள்
  • ஏப்ரல் 13 வரை மீனத்தில் சூரியன் இருப்பார்
  • சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும்.
சூரிய தேவனின் அருளால் மகிழ்ச்சி கடலில் நீந்த போகும் ‘3’ ராசிகள்..!! title=

ஜோதிடத்தில் சூரியக் கடவுளுக்கு தனி இடம் உண்டு. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார் (Sun Transit). இந்த நேரத்தில் சூரிய பகவான் மீன ராசியில் இருக்கிறார். மீனத்தில் வசிக்கும் சூர்ய தேவன் சில ராசிக்காரர்களுக்கு விசேஷமாக சாதகமாக இருக்கிறார். ஏப்ரல் 13 வரை சூரியன் மீன ராசியில் இருப்பார். இந்த சூரியப் பெயர்ச்சி பலன்களால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும்.

மேஷம்:

பணியில் உற்சாகம் உண்டாகும். ஆன்மீக நடவடிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். தாய் ஆதரவாக இருப்பார். தாயாரிடம் இருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. அறிவார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். வேலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது குடும்பத்தினர் ஆன்மீக வழிபாட்டு இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.

மேலும் படிக்க | சுக்கிரனின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறவுள்ளது, அடிக்கும் ஜாக்பாட் 

கன்னி:

வியாபாரம் விரிவடையும். சகோதரர்களின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். ஆடை போன்ற பரிசுப்பொருட்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வேலையை மாற்றம் காரணமாக வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் லாப வாய்ப்புகள் உள்ளன. வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. 

தனுசு:
ஆனந்த உணர்வுகள் மனதில் நிலைத்திருக்கும். நீங்கள் வேறு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், வேலை மாற்றம் மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கும். வருமானம் அதிகரிக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தாரின் ஆதரவும் இருக்கும். ஆடை போன்ற செலவுகள் கூடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மேஷ ராசிக்குள் நுழையும் ராகு; சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News