ராசிபலன் இன்று, 5 ஏப்ரல் 2022: சில ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிழமை மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய் கிழமை உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை ஆஸ்ட்ரோ குரு பெஜன் தருவாலாவின் மகன் சிராக் தருவாலாவிடம் இருந்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான எண்ணங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவின் மூலம் மேன்மை ஏற்படும். பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 
 
ரிஷபம்: கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை அகலும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.


மிதுனம்: பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களில் விவேகம் வேண்டும். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.


கடகம்: வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.


சிம்மம்: சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.


கன்னி: கன்னி ராசிக்காரர்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.


துலாம்: குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.


விருச்சிகம்: வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த வழக்கு தொடர்பான பணிகளுக்கு தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றியும், உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், தெளிவும் கிடைக்கும்.


தனுசு: உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். தொண்டை தொடர்பான வலிகள் படிப்படியாக குறையும். வாகனம் தொடர்பான பயணங்களில் மாற்றங்கள் ஏற்படும்.


மகரம்: தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய செயல்திட்டங்களை அமைத்து அதை செயல்வடிவில் மாற்றுவீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும்.


கும்பம்: சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் விருப்பங்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.


மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு நெருக்கமானவர்களின் ஆதரவின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மற்றவர்களுடைய பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR