எப்டி என்னும்  நிலையான வைப்புத்தொகையில் (FD) அவ்வப்போது முதலீடு செய்து வந்தால், இந்தச் செய்தி உங்களுக்குத்தான். எப்டி தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியுள்ளது. புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக, அரசு மற்றும் அரசு சாரா வங்கிகள் நிலையான வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இந்நிலையில், FD கணக்கு தொடர்பாக மாறியுள்ள விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம். இல்லை என்றால் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

FD தொடர்பான RBI அமல்படுத்தியுள்ள புதிய விதி 


எப்டி கணக்கு முதிர்வுக்குப் பிறகு உங்கள் தொகையை நீங்கள் க்ளைம் செய்யவில்லை என்றால்,  முதிர்வு காலத்திற்கு பிறகு உள்ள காலத்திற்கு குறைவான வட்டி கிடைக்கும். நிலையான வைப்பு (FD) விதிகளில் RBI இந்த மாற்றத்தை செய்துள்ளது. முதிர்வு காலத்திற்கு பின் கிடைக்கும் வட்டி FD கணக்கிற்கான வட்டியாக அல்லாமல், சேமிப்பு கணக்கில் பெறப்படும் வட்டிக்கு சமமாக இருக்கும். தற்போது, ​​5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 5 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை வங்கிகள் வழங்குகின்றன. அதே நேரத்தில், சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்கள் 3 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே இருக்கும்.


புதிய விதி


 ரிசர்வ் வங்கி வழங்கிய தகவலின்படி, FD முதிர்ச்சியடைந்து, கணக்கு புதுப்பிக்கப்படாமலோ அல்லது உரிமைகோரப்படாமலோ இருந்தால், அதன் மீதான வட்டி விகிதம் சேமிப்புக் கணக்குகள் அல்லது  FD ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. வட்டி விகிதம், எது குறைவாக இருக்கிறதோ, அது கிடைக்கும். இந்த விதிகள் அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், உள்ளூர் பிராந்திய வங்கிகள் ஆகியவற்றில் உள்ள டெபாசிட்களுக்கு பொருந்தும்.


மேலும் படிக்க | எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்?


எடுத்துக்காட்டாக, நீங்கள் 5 வருட முதிர்ச்சி காலத்திற்கான FD கணக்கு வைத்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். அதன் முதிர்வு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் பணம் எடுக்கவில்லை. அது போன்ற நிலையில், இரு வகையில் வட்டி தீர்மானிக்கப்படும் முதலாவதாக, சேமிப்புக் கணக்கின் வட்டியை விட FD மீதான வட்டி குறைவாக இருந்தால், FD கணக்கிற்கான மட்டுமே வட்டி கிடைக்கும். இரண்டாவதாக, சேமிப்புக் கணக்கின் மீதான வட்டியை விட FD மீதான வட்டி அதிகமாக இருந்தால், முதிர்வுக்குப் பிறகு சேமிப்புக் கணக்கிற்கான வட்டி கிடைக்கும்.


பழைய விதி


முன்னதாக, உங்கள் FD முதிர்ச்சியடைந்த பிறகு, நீங்கள் அதை திரும்பப் பெறவில்லை அல்லது உரிமை கோரவில்லை என்றால், நீங்கள் முன்பு நிலையான வைப்புத்தொகையைச் செய்த அதே காலத்திற்கு வங்கி உங்கள் FDயை நீட்டிக்கும். ஆனால் இப்போது முதிர்ச்சியில் பணத்தை எடுக்கவில்லை என்றால், அதற்கு FD வட்டி கிடைக்காது.


மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR