ஒத்தைக்கு ஒத்தையா மோதிபாக்கலாம் வரியா?... அப்படினு நேருக்கு நேர் சவால் விட்ட காலமெல்லாம் போச்சுங்க. இப்ப நம்ம சவால் எல்லாம் Facebook, Instagram, Twitter-னு கைபேசியோடு முடிஞ்சுப்போச்சு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளந்துவரும் வரும் நவநாகரீக உலகில் சவால்களும் பருவமாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இணையத்தை கலக்கிய சவால்கள்.,  ஐஸ் பக்கெட் சவால், KiKi சவால், ஸ்நூப் சவால் என அடுக்கிக்கொண்டே போகலாம்..


அந்த வரிசையில் தற்போது 2019-ஆம் ஆண்டில் முதன்முறையாக களமிறங்கியிருக்கும் சவால் #.10YearChallenge. ஒரு பொருள் அல்லது நபர் பத்து ஆண்டுகளில் எவ்வாறு மாற்றம் கண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இந்த சவாலினை ஏற்று பலரும் பிரபலங்களின் 10 ஆண்டு இடைவெளி புகைப்படங்கள், பொருட்களின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அவற்றுல் சில உங்கள் பார்வைக்கு....