`ஃபிட் இந்தியா` குழுவில் இணைந்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இப்போது மத்திய அரசின் ஃபிட் இந்தியா பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராகிவிட்டார்.
புதுடெல்லி: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நடனம் மற்றும் திரைத்துறை மூலமாக மட்டுமில்லை, அவரது உடற்தகுதிக்காகவும் நன்கு அறியப்படுகிறார். ஷில்பா தனது யோகா மற்றும் உடற்பயிற்சி அடங்கிய வீடியோ சிடியை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்பொழுது தந்து ட்விட்டர் பக்கத்தில் மேலும் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதன்மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் ஆரோக்கியத்தையும் ஷில்பா ஷெட்டி கவனித்துக்கொள்வார்.
ஷில்பா ஷெட்டி இப்போது மத்திய அரசின் ஃபிட் இந்தியா பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராகிவிட்டார். ஆமாம், இந்த தகவலை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
ஷில்பா ஷெட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தந்து சமூக வலைதளத்தில், 'மாண்புமிகு பிரதமரால் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா பிரச்சாரத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிட்னஸாகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருக்க ஒவ்வொரு இந்தியருக்கும் எளிதான வழிகளைக் கண்டுபிடிக்க நான் உதவ முடியும் என்று நம்புகிறேன். இதன்மூலம் ஃபிட் இந்தியா பிரச்சாரத்தை நான் இன்னும் வெற்றிகரமாக செய்ய முடியும் என நம்புகிறேன் என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை பி.எம்.ஓ இந்தியா மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரையும் ஷில்பா டேக் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஃபிட் இந்தியா இயக்கத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு, அரசு அதிகாரிகள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இந்த ஃபிட் இந்தியா இயக்கம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.