Flipkart Mobile Bonanza Sale: பிளிப்கார்ட்டில் மொபைல் போனான்ஸா விற்பனை நடந்து வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போனை மிகவும் மலிவான விலையில் பெற முடியும். பல பெரிய பிராண்டுகளில் மிக அதிக அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய சிறந்த டீல்களைப் பற்றி பேசுகையில், நீங்கள் வலுவான பேட்டரியுடன் கூடிய பட்ஜெட் ரெஞ்ச் ஸ்மார்ட்போன் Redmi Note 9-ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க முடியும். இந்த தொலைபேசியில் நீங்கள் எவ்வளவு தள்ளுபடி பெற முடியும் என்பதை இங்கே காணலாம். 


Redmi Note 9 இல் கிடைக்கும் சிறந்த சலுகைகள்


இந்த சேலில் Redmi Note 9 -ஐ வெறும் ரூ .10,499 என்ற ஆரம்ப விலையில் வாங்க முடியும். இந்த தொலைபேசியை நிறுவனம் 11,999 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இது அதன் 4 ஜிபி + 64 ஜிபி வகையின் விலையாகும். இது தவிர, இந்த ஸ்மார்ட்போனில் 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தள்ளுபடி எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) கிரெடிட் கார்டுகளில் மட்டுமே கிடைக்கும். அதாவது, உங்களிடம் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்ட் இருந்தால், நீங்கள் அதை ஈ.எம்.ஐ.-யில் 10 சதவீத உடனடி தள்ளுபடியுடன் வாங்கலாம். இது தவிர, நோ காஸ்ட் ஈ.எம்.ஐ-க்கான (No Cost EMI) ஆப்ஷன் மற்றும் பரிமாற்ற சலுகையையும் பெற முடியும்.


தொலைபேசி அம்சங்கள்


Redmi Note 9- இன் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில், இது 6.53 இன்ச் முழு எச்டி + டாட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 2340x1080 பிக்சல் தெளிவுத்திறனுடன் வருகிறது. டிஸ்பிளேவின் ஆஸ்பெக்ட் விகிதம் 19.5: 9 ஆக உள்ளது. திரை பாதுகாப்பிற்காக, தொலைபேசியில் ஸ்பிளாஷ் ஃப்ரீ நானோ பூச்சு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த தொலைபேசியை அக்வா கிரீன், ஆர்க்டிக் ஒயிட் மற்றும் பெப்பிள் கிரே ஆகிய மூன்று வண்ண வகைகளில் வாங்கலாம்.


ALSO READ: Flipkart sale: வெறும் ரூ.8999-ல் கிடைக்கும் அட்டகாச டிவி, இன்னும் பல சலுகைகள்


ஸ்மார்ட்போனின் கேமரா எப்படி உள்ளது? 


கேமராவைப் பற்றி பேசுகையில், நான்கு பின்புற கேமராக்கள் இந்த தொலைபேசியில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் 48 மெகாபிக்சல் பிரதான AI கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபி எடுப்பதற்காக ரெட்மி நோட் 9 இன் முன்புறத்தில் 13 மெகாபிக்சலின் டிஸ்ப்ளே கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone), செல்பி மற்றும் பின்புற கேமரா உட்பட பயனர்களுக்கு மொத்தம் 5 கேமராக்கள் கிடைக்கும்.


பேட்டரி


பவரைப் பொறுத்தவரை, இந்த தொலைபேசியில் 5,020mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. தகவல்களின்படி, வாடிக்கையாளர்களுக்கு ரீடெயில் பாக்சில் 22.5W சார்ஜர் கிடைக்கும். தொலைபேசியின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இது 9W மேக்ஸ் வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.


ALSO READ: Flipkart Big Saving Days Sale: இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் தள்ளுபடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR