தேவர்களின் குருவான வியாழன் ஏப்ரல் 12ஆம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். அவர் ஏப்ரல் 11 ஆம் தேதி தனது சொந்த ராசியான மீனத்திற்குள் நுழைவார். வியாழன் பொதுவாக எந்த ராசியிலும் 1 வருடம் வரை சஞ்சரிக்கிறார். இதற்கு முன், குரு பிப்ரவரி 23 அன்று அஸ்தமித்து நான்கு நாட்களுக்கு முன்னர்தான் உதயமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது குரு பகவான் இந்த ராசியில் ஆண்டு முழுவதும் இருப்பார். ஆகையால் இந்த ஆண்டின் முக்கிய ராசி மாற்றங்களில் ஒன்று இதுவாகும். 


தேவகுரு பிருஹஸ்பதி ஜோதிடத்தில் தனி இடம் பெற்றுள்ளார். தேவகுரு பிருஹஸ்பதி அறிவு, ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, மதப் பணி, புனித இடங்கள், செல்வம், தொண்டு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது. குரு பகவானின் ராசி மாற்றத்தால் 4 ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடையப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | கிரகநிலைகளில் பெரும் மாற்றம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள் 



மிதுனம்: 


மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் லாக்டவுன் காரணமாக பணியில் பதவி உயர்வு பெற முடியாமல் போனவர்களும் பணியில் பதவி உயர்வு பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. பணி இடத்தில் அதிக கவுரமும், நல்ல பெயரும், ஊதிய உயர்வும் கிடைக்கும். 


மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட பணிகள் மீண்டும் நடக்கும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடைவார்கள்.


ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு நேரம் மிகவும் நல்லதாக உள்ளது. இவர்களுக்கு குருவின் அருளால் திருமணம் கைகூடும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பணியிடத்திலும் வீட்டிலும் மரியாதை அதிகரிக்கும். 


மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த மாற்றம் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் பல வெற்றிகளை காண்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 


மேலும் படிக்க | புத்திசாலி புதனும் சனியுடன் இணைந்தால் இந்த 3 ராசி பெண்களுக்கு கொண்டாட்டம் தான் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR