சுக்ரன் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிர தசை, இன்று முதல் ராஜ யோகம் ஆரம்பம்

Venus Transit:  6 ராசிக்காரர்களுக்கு, சுக்ரனின் ராசி மாற்ற காலகட்டத்தில் அளவுகடந்த மகிழ்ச்சி, செழிப்பு, வளமை, அன்பான குடும்ப சூழல் ஆகியவை கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2022, 03:42 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பெரிய அளவிலான நன்மைகளைத் தரும்.
  • இந்த நேரம் அந்தஸ்து, பணம், கவுரவம் என அனைத்தும் அதிகரிக்கும்.
  • பண வரவு அதிகமாக இருக்கும்.
சுக்ரன் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிர தசை, இன்று முதல் ராஜ யோகம் ஆரம்பம் title=

அன்பு, அழகு, செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை தரும் சுக்கிரன் கிரகம் 2022 மார்ச் 31 வியாழன் அன்று தனது ராசியை மாற்றி கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளது. சனி பகவான் கும்ப ராசிக்கு அதிபதியாவார். அதில் சுக்கிரன் பிரவேசம் செய்வது பெரிய நிகழ்வாகும்.

சுக்கிரனின் இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களிலும் காணப்படும். எனினும், சுக்கிரனின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சுபமாக இருந்தாலும், சிலருக்கு அசுப பலன்களைத் தரப்போகிறது. ஏப்ரல் 27 ஆம் தேதி வரை சுக்கிரன் இந்த நிலையில் நீடிப்பதால் அதுவரை கடகம், கன்னி, தனுசு ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மறுபுறம், 6 ராசிக்காரர்களுக்கு, இந்த காலகட்டத்தில் அளவுகடந்த மகிழ்ச்சி, செழிப்பு, வளமை, அன்பான குடும்ப சூழல் ஆகியவை கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பெரிய அளவிலான நன்மைகளைத் தரும். இவர்கள் சொத்துக்களால் ஆதாயம் அடைவார்கள். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்கார்ரகளுக்கு கார் வாங்கும் யோகம் உண்டு. தடைபட்ட வேலைகள் தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி நல்ல பலன்களைப் பெறுவார்கள். 

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அந்தஸ்து, பணம், கவுரவம் என அனைத்தும் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், அங்கு செட்டில் ஆக எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கும் தற்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த காலத்தில் கடினமாக உழைத்தால், ஒன்றன் பின் ஒன்றாக வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் கால சர்ப்ப தோஷம்; சில எளிய அமாவாசை பரிகாரங்கள்!

மிதுனம்
சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசிப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான வெற்றியைத் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் மிதுன ராசிக்காரர்கள் பெறுவார்கள். தேர்வுகள், நேர்காணல்களில் தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். 

துலாம்
சுக்கிரனின் ராசி மாற்றம் துலா ராசிக்காரர்களுக்கு இனிமையான தருணங்களை ஏற்படுத்திக்கொள்ளும். வாழ்க்கையில் பண வரவு அதிகமாக இருக்கும். காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் உறவு வலுவாக இருக்கும். காதல் திருமணம் செய்ய விரும்புவோருக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.

மகரம்
சுக்கிரன் கும்ப ராசியில் நுழைவதால் மகர ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். இது அவர்களின் நிதி நிலையை பலப்படுத்தும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணங்கள் நிச்சயிக்கப்படும்.

கும்பம்
சுக்கிரன் கும்ப ராசி-க்குள் நுழைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய தாக்கம் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இரண்டிலும் முன்னேற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் அஸ்தமனம்: ஏப்ரல் 12 வரை இந்த ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் தொடரும், ஹை அலர்ட் தேவை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News