கொரோனா தடுப்பூசி போட செல்பவர்களுக்கு UBER அளிக்கும் இலவச சவாரி: விவரம் இதோ!!
ஆன்லைன் கேப் சேவையை வழங்கும் நிறுவனமான ஊபர் (UBER) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி மையத்திற்கு செல்பவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ள இந்த நிறுவனம் இதன் மூலம், இந்திய அரசின் தடுப்பூசி செயல்முறைக்கு பெரும் உதவியை செய்துள்ளது.
புது டெல்லி: நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ முன்வருகின்றனர். யாரால் எந்த அளவுக்கு உதவ முடியுமோ அவ்வளவு உதவி வருகின்றனர். அந்த வகையில், ஆன்லைன் கேப் சேவையை வழங்கும் நிறுவனமான ஊபர் (UBER) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி மையத்திற்கு செல்பவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ள இந்த நிறுவனம் இதன் மூலம், இந்திய அரசின் தடுப்பூசி செயல்முறைக்கு பெரும் உதவியை செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவும் விகிதம் அச்சத்தை அளிக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அரசின் தடுப்பூசி செயல்முறை தொடங்கப்பட்டது. மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், UBER-ன் இந்த முன்முயற்சி வரவேற்கத்தக்கது. ஏனெனில் பண தட்டுப்பாடு காரணமாக பலரால தடுப்பூசி மையத்திற்கு கூட செல்ல முடிவதில்லை.
இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்
தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீங்கள் ஒரு தடுப்பூசி மையத்திற்குச் செல்லப் போகிறீர்கள் என்றால், நீங்கள் UBER ஐ புக் செய்தால் போதும். UBER வண்டி உங்களை இலவசமாக தடுப்பூசி மையத்திற்கு அழைத்துச் செல்லும். இதில், நீங்கள் UBER Go, UBER Go Sidan மற்றும் UBER Premium ஐ மட்டுமே புக் செய்ய முடியும். ஆனால் வண்டியை முன்பதிவு செய்யும் போது, நீங்கள் 10M21V என்ற இந்த விளம்பர குறியீட்டை (Promo Code) பயன்படுத்த வேண்டும். இருப்பினும், தடுப்பூசி (Vaccination) மையத்தை அடையும் வரையிலான வண்டி கட்டணம் ரூ .300 க்குள் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல் குறைந்தபட்சம் 150 ரூபாயாக இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
ALSO READ: கோவிட் மூன்றாவது அலையை தவிர்க்கமுடியாது: எச்சரிக்கும் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர்
இந்த வகையில் இலவசமாக UBER ஐ புக் செய்யலாம்
முதலில், நீங்கள் UBER செயலியைத் திறக்க வேண்டும். இங்கே, வாலெட்டில் சென்று, ப்ரொமோ கோடை கிளிக் செய்ய வெண்டும். இங்கு உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரொமோ கோட், அதாவது, 10M21V-ஐ உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, நேவிகேஷனின் பிக்-அப் / டிராப்-ஆஃப் லொகொஷனை, அதாவது உங்களை எங்கிருந்து எந்த எடத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டுமம் என்பதை செட் செய்ய வேண்டும். டிராப் இடத்தில் தடுப்பூசி மையத்தின் பெயரை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு 'கன்ஃபர்ம் ட்ரிப்'-ல் கிளிக் செய்ய வேண்டும். இருப்பினும், பயனரால் எடுக்கப்பட்ட வண்டியில் அவர் நிஜமாகவே தடுப்பூசி மையத்துகுதான் செல்கிறாரா என்பதை ஊபர் எப்படி சரிபார்க்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
UBER 36 நகரங்களில் இந்த சேவையை அளிக்கிறது.
இது தவிர, ஊபர் அதன் பயனர்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மையத்தின் தகவல்களையும் அளித்து உதவுகிறது. நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்கள் பற்றிய பட்டியலையும் ஊபர் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தடுப்பூசி செயல்முறை செயலில் உள்ள நாட்டின் 36 நகரங்களில் ஊபர் தனது சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2020 முதல், ஊபர் ஒரு புதிய கொள்கையையும் அறிமுகம் செய்துள்ளது. வாகனத்தை பயன்படுத்துபவர்கள், வண்டியில் அமர்ந்தவுடன் கண்டிப்பாக முகக்கவசத்தை அணியவேண்டும்.
ALSO READ: அச்சத்தின் உச்சம் தொடும் கோவிட்: ஒரே நாளில் 4.14 லட்சம் பேர் பாதிப்பு, 3915 பேர் பலி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR