சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் ஆறாம் தேதியன்று இந்த் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உபர் (Uber) நிறுவனம் அறிவித்துள்ளது.
100 சதவிகிதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் உபர் இந்த சேவையை அறிவித்துள்ளது. பயனாளர்கள் கைபேசியின் மூலம் ஊபர் செயலி வழியாக இலவச சேவைக்கு முன்பதிவு செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உபர் நிறுவனம் மட்டுமல்ல, பல பிரபலங்கள் தேர்தல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதைத் தவிர தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு நட்சத்திரங்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்கள் ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.
Also Read | Elections 2021: கோவிட் பாதிப்புள்ளவர்கள் கடைசி 1 மணி நேரத்தில் வாக்குகளை செலுத்தலாம்
கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பாக தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வயதானவர்களும், முதியவர்களும் வாக்குச்சாவடிகளுக்கு (Polling Booth) வந்து வாக்களிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத் தக்கது. அதேபோல, 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கும் முறையையும் தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் ஆறாம் தேதியன்று வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கார் சேவை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்வதற்காக இலவச சேவையை வழங்க ஊபர் நிறுவனம் முன்வந்துள்ளது.
Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR