புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.14 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,915 பேர் இறந்தனர் என பதிப்வாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 7, 2021) தெரிவித்துள்ளது.
இந்தியா COVID-19 இன் ஆபத்தான இரண்டாவது அலையில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கின்றது. இதுவரை, இந்தியாவில் மொத்தமாக 2,14,91,598 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,76,12,351 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2,34,083 பேர் இறந்துள்ளனர். தற்போது நாட்டில் 36,45,164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 4,00,000 க்கும் மேற்பட்ட ஒற்றை நாள் தொற்று இங்கு பதிவாகி வருகிறது.
ALSO READ: Pfizer தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள்
இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களில், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, சத்தீஸ்கர், தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஹரியானா ஆகிய பன்னிரண்டு மாநிலங்களில் பெரும்பான்மையானோர் உள்ளனர் என்று அரசாங்கம் மேலும் வெளிப்படுத்தியது.
இதற்கிடையில், ராஜஸ்தான் அரசாங்கம் வியாழக்கிழமை (மே 6) மாநிலத்தில் முழுமையான ஊரடங்கை அறிவித்தது. இந்த முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி அதிகாலை 5:00 மணி முதல் மே 24 ஆம் தேதி அதிகாலை 5:00 மணி வரை நடைமுறையில் இருக்கும். அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. திருமணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அசோக் கெஹ்லோட் அமைச்சர்கள் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து (அனைத்துவித போக்குவரத்து முறையிலும்) தேசிய தலைநர் டெல்லிக்கு வரும் மக்கள், 14 நாட்கள் கட்டாய நிறுவன தனிமைப்படுத்தலில் (Quarantine) இருக்க வேண்டியிருக்கும் என்று தில்லி அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: தடுப்பூசி போடும் பணிக்கு இடையூறாகும் வகையில் லாக்டவுன் இருக்கக் கூடாது: PM Modi
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR