SBI டெபிட் கார்டு பின்; வீட்டில் இருந்தபடி இதைச் செய்யுங்க
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு பின்னை கட்டணமில்லா எண் மூலம் எளிதாகப் பெறலாம்.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மற்றும் யுபிஐ ஆப்ஸ் மூலமாக நெட்பேங்கிங் செய்யும் வசதிகள் பெரியளவில் மேம்பாட்டுள்ளது. இருந்தாலும் கூட, பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உங்களுடைய ஏடிஎம் பின் இன்னும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போது நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், வங்கி முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், பணியும் எளிதாகிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆன்லைன் டெபிட் கார்டு பின் உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம், உங்கள் டெபிட் கார்டின் பின்னை வீட்டிலிருந்த படியே உருவாக்கலாம்.
மேலும் படிக்க | SBI Alert: இதை மட்டும் செய்யாதீர்கள், கணக்கில் உள்ள பணம் காலியாகிவிடும்
அத்னபடி தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் செய்து தகவல் ஒன்றை அளித்துள்ளது. அதில், ஐவிஆர் மூலம் உங்கள் டெபிட் கார்டு பின் அல்லது கட்டணமில்லா எண்ணை எளிதாக உருவாக்கலாம். பின்னை உருவாக்கும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், 1800 1234 என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் தகவலைப் பெறலாம். இந்த செயல்முறையை முடிக்க உங்களிடம் வங்கி கணக்கு எண் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்த படி எஸ்பிஐ டெபிட் கார்டு பின் உருவாக்குவது எப்படி-
* நீங்கள் எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் பின் ஐ உருவாக்க விரும்பினால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800 1234 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
* இதற்குப் பிறகு, உங்களுக்கு ஐவிஆர் விருப்பம் இங்கே காண்பிக்கப்படும்.
* ஏடிஎம் அல்லது டெபிட் கார்டின் பின்னை உருவாக்க இரண்டு விருப்பங்கள் வழங்கப்படும்.
* 1 எண்ணை உள்ளிடும்போது பின் உருவாக்கப்படும்.
* நீங்கள் பின்னை உருவாக்க விரும்பும் கார்டின் கடைசி நான்கு எண்களை உள்ளிடவும்.
* கார்டு எண்ணை உறுதிப்படுத்த 1ஐ அழுத்தவும்.
* உங்கள் பிறந்த தேதியை உறுதிப்படுத்தவும். அதன் பிறகு வங்கியில் இருந்து பின் எண் பெறப்படும்.
* வங்கியின் பின் செய்தி 24 மணிநேரத்தில் பெறப்படும்.
* 24 மணிநேரத்திற்குப் பிறகு, அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம்மிற்குச் சென்று பின்னை மாற்றலாம்.
மேலும் படிக்க | குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் ‘சில’ வங்கிகள் விபரம் இதோ..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR