பழங்காலத்திலிருந்தே மனிதனுக்கும் நதிகளுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது, சிந்து நதிக்கரையில் தான் மனித நாகரிகம் பிறந்தது என்றெல்லாம் இருக்கும் வரலாற்றை நாம் கேட்டறிந்து இருக்கிறோம்.  நீர் என்பது மனிதர்கள் மட்டுமின்றி உலகில் உயிரினங்களாக பிறந்த அனைவருக்குமே தேவைப்படும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்து வருகிறது.  நதிகளின் நீர் முக்கியமாக விவசாயப் பணிகளுக்கும், குடிப்பதற்கும், மின்சாரம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது நமக்கு தெரியும்.  ஆனால் நீர்  தங்கத்தை தருகிற செய்தி பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, நதிகளில் தங்கம் கிடைக்கிறது எனும் செய்தி கேட்பதற்கு சற்று ஆச்சர்யமாகவும், நம்பமுடியாததாகவும் இருக்கும்.  ஆனால் அது உண்மை தான், உலகில் சில ஆறுகளில் தங்கம் கிடைக்கிறது, அந்த தங்கத்தை அள்ளித்தரும் ஆறுகளை பற்றி இங்கு காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தங்க நகைகள் வாங்க போறீங்களா? வந்தது புதிய விதிகள்! ஜாக்கிரதை!


1) சுபர்ணரேகா நதி (ஜார்கண்ட்):


ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் பாயும் சுபர்ணரேகா நதியின் நீரிலிருந்து தங்கம் பெறப்படுகிறது.  ஜார்க்கண்டில் உள்ள தமாத் மற்றும் சரண்டா போன்ற இடங்களில், உள்ளூர் பழங்குடியினர் சுபர்ணரேகா ஆற்றின் மணலை வடிகட்டி அதிலுள்ள தங்கத் துகள்களை சேகரிக்கின்றனர். இந்த பகுதியில் நாள் முழுவதும் மணலை வடிகட்டிய பிறகு ஒன்று அல்லது இரண்டு தங்கத் துகள்கள் என மாதம் முழுவதும் 60 முதல் 80 தங்கத் துகள்களைப் பெறுகின்றனர்.  இந்த தங்க துகள்கள் அரிசி தானியங்களை விட சற்று பெரியது.  வெள்ளத்தின் போது மட்டும் இந்த பகுதியில் இரண்டு மாதங்கள் பணி நிறுத்தப்படும். மணலில் இருந்து தங்கம் எடுப்பவர்களுக்கு ஒரு துகளுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை வழங்கப்படும், இருப்பினும் சந்தையில் ஒரு துகளின் விலை சுமார் ரூ.300 அல்லது அதற்கு மேல் விற்கப்படுகிறது.  இந்த தங்கத் துகள்களை விற்பதன் மூலம் ஒருவர் மாதம் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை சம்பாதிக்கின்றனர். 



2) கரகாரி ஆறு (ஜார்கண்ட்):


சுபர்ணரேகா நதியைப் போலவே, அதன் துணை நதியான 'கரகாரி' ஆற்றின் மணலில் தங்கத் துகள்கள் காணப்படுகின்றன.  சுபர்ணரேகா நதியில் உள்ள தங்கத் துகள்கள் கரகாரி நதி வழியாகச் சென்றடைகின்றன என்றும் சிலர் கூறுகின்றனர், இருப்பினும் இது பற்றிய தெளிவான ஆதாரம் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.  இந்த கரகாரி ஆற்றின் நீளம் சுமார் 37 கி.மீ. ஆகும்.


3) க்ளோண்டைக் நதி (கனடா):


கனடாவின் டாசன் நகரில் பாயும் க்ளோண்டைக் நதியிலிருந்தும் தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது, இந்த ஆற்றின் வண்டலில் தங்கம் விழுந்ததாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.  1896-ம் ஆண்டில், ஜார்ஜ் கார்மேக், டாசன் சார்லி மற்றும் ஜிம் மேசன் ஆகியோர் தான் இந்த ஆற்றில் தங்கம் இருப்பதை முதன்முதலில் கண்டறிந்தனர்.  இந்த மணலிலுள்ள தங்கத்தை பிரிக்க, ஆற்றின் உறைந்த மணல் வாளிகளில் சேகரிக்கப்பட்டு பல முறை வடிகட்டப்படுகிறது.  அதன் பிறகு ஆற்றின் நீர் சிறிய பாத்திரங்களில் வைக்கப்பட்டு ஐஸ்கட்டி வடிவில் சேமிக்கப்படுகிறது, இறுதியில் அந்த பனியில் இருந்து தங்கத் துண்டுகள் பிரிக்கப்படுகின்றன.  இந்த தங்கத் துண்டுகள் பல வடிவங்களில் காணப்படுகிறது, சில துண்டுகள் முத்துக்களைப் போலவும், சில துண்டுகள் மெல்லிய தோல்களைப் போலவும், சில துண்டுகள் செதில்களை போலவும் காணப்படுகிறது.  இந்த ஆற்றில் தங்கத்தை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம், இதற்கு எவ்வித தடையும் கிடையாது மற்றும் இந்த பகுதியில் யார் வேண்டுமானாலும் அகழ்வாராய்ச்சி செய்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும்?


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ