தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கேமுன்னுரிமை அளிக்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பாலான நாடுகளில் தங்கம் முதலீட்டுக்கான வழியாக மட்டுமே இருக்கும் வேளையில், நம் நாட்டில் மட்டும்தான் இதற்கு பலவகை பயன்பாடுகள் உள்ளன. 


தங்கத்தின் விலை (Gold Rate) கொரோனா காலத்தில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. இது மக்களுக்கு பலவித சிரமங்களையும் அளித்து வருகிறது.


இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து 4,566 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவர 256 ரூபாய் அதிகரித்து 36,528 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


ALSO READ: Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன 


சற்று நிவாரணம் அளிக்கும் வகையில் வெள்ளி விலை (Silver Rate )சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் குறைந்து 72,700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகளாவிய சந்தைகளில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களைக் காண முடிகின்றது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் ஸ்திரமற்ற தன்மையே உள்ளது.


சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலைகள் திங்களன்று சரிந்தன. கோல்ட் ஃப்யூச்சர்ஸ் 1805 அமெரிக்க டாலர்களுக்கும், சில்வர் ஃப்யூச்சர்ஸ் 25.50 அமெரிக்க டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலைகள் மேலும் 1798 அமெரிக்க டாலராகவும், வெள்ளி 25 அமெரிக்க டாலராகவும் குறையக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.


பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.


ALSO READ: Gold Rate Today: இன்றும் சரிந்தது தங்கத்தின் விலை, வாங்கினால் லாபம் காணலாம்!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR