Gold Silver Rate Today: மீண்டும் குறையும் தங்கத்தின் விலை, வாங்க இது நல்ல நேரமா?

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தைக் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2021, 11:14 AM IST
Gold Silver Rate Today: மீண்டும் குறையும் தங்கத்தின் விலை, வாங்க இது நல்ல நேரமா?  title=

Gold / Silver Rates Today: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தைக் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்துள்ளது.

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. 11 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு குறைந்து வந்த தங்கத்தின் விலை (Gold Price), 14 ஆம் தேதி ஏற்றம் பெற்றது. 15 ஆம் தேதியும் உயர்ந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,566க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.72 குறைந்து ரூ.36,528க்கு விற்பனையாகிறது. 

எனினும் வெள்ளி விலையில் (Silver Price), சிறிய ஏற்றத்தைக் காண முடிந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.74.70 க்கு விற்கப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,700 ஆக உள்ளது. 

ALSO READ: Sovereign Gold Bonds: தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கும் வாய்ப்பு, விலை என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகளாவிய சந்தைகளில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களைக் காண முடிகின்றது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் ஸ்திரமற்ற தன்மையே உள்ளது.

கொரோனா பெருந்தொற்று (Coronavirus) காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உள்ளது. பல இடங்களில் தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொழிதுறையில் தேக்கம் உள்ளது. மக்கள் தற்போது எதிர்பாராத வகையில் தங்கத்தில் முதலீடுகள் செய்து வருகின்றனர். தங்க முதலீடுகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, தங்கம் விலை மற்றும் வெள்ளி விலையில் அதிகரிப்பைக் காண முடிகின்றது. 

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

ALSO READ: Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News