Gold Rate Today: இன்றும் சரிந்தது தங்கத்தின் விலை, வாங்கினால் லாபம் காணலாம்!!

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகளாவிய சந்தைகளில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களைக் காண முடிகின்றது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் ஸ்திரமற்ற தன்மையே உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2021, 11:41 AM IST
Gold Rate Today: இன்றும் சரிந்தது தங்கத்தின் விலை, வாங்கினால் லாபம் காணலாம்!!  title=

Gold / Silver Rates Today: உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை மற்றும் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. 

11 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு குறைந்து வந்த தங்கத்தின் விலை (Gold Price), 14 ஆம் தேதி ஏற்றம் பெற்றது. 15 ஆம் தேதியும் உயர்ந்த தங்கத்தின் விலை நேற்று மீண்டும் குறைந்தது. இப்படி கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தைக் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. 

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.18 குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் தங்கத்தின் விலை, கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து ரூ. 4,542-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சவரனுக்கு ரூ. 144 குறைந்துள்ள தங்கம் ஒரு சவரன் ரூ. 36,336-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி (Silver) கிராமுக்கு ரூ.1.10 குறைந்து ரூ. 73.20-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதன் படி ஒரு கிலோ வெள்ளி 73,200 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது.

ALSO READ: Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகளாவிய சந்தைகளில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களைக் காண முடிகின்றது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் ஸ்திரமற்ற தன்மையே உள்ளது.

கொரோனா பெருந்தொற்று (Coronavirus) காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உள்ளது. பல இடங்களில் தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொழிதுறையில் தேக்கம் உள்ளது. மக்கள் தற்போது எதிர்பாராத வகையில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்க முதலீடுகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, தங்கம் விலை மற்றும் வெள்ளி விலையில் அதிகரிப்பைக் காண முடிகின்றது. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி விகிதங்கள் காலை நிலவரப்படி எடுக்கப்பட்டவை. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து இவற்றில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். சர்வதேச சந்தை நாணய விலையில் மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதங்கள், நகை சந்தை, புவியியல் பதட்டங்கள், வர்த்தகப் போர்கள் மற்றும் இது போன்ற பல காரணிகளாக் தங்கத்தின் விலையின் ஏற்ற இறக்கத்திற்கு பல காரணங்கள் இருப்பதாக புல்லியன் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

ALSO READ: Gold Silver Rate Today: மீண்டும் குறையும் தங்கத்தின் விலை, வாங்க இது நல்ல நேரமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News