புதுடெல்லி: நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தீபாவளிக்கு முன்னதாக மலிவான வீட்டுக்கடன்களை வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது. வங்கி மீண்டும் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலக்குக்குப் பிறகு, வங்கியின் வீட்டுக் கடன் விகிதம் 6.40 சதவீதமாகியுள்ளது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மற்ற வங்கிகளை விட மிகக் குறைந்த அளவில் இருப்பதாக வங்கி கூறுகிறது. புதிய கட்டணங்கள் 27 அக்டோபர் 2021 முதல் அமலுக்கு வந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலிவான வீட்டுக் கடன் விகிதம்


வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வட்டி விகிதங்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய குறைப்புக்குப் பிறகு, வீட்டுக் கடன் (Home Loan) விகிதங்கள் 6.40 சதவீதத்தில் இருந்து தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. வங்கி இதுவரை வழங்கிய வீட்டுக் கடனின் மலிவான விகிதங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது ஏற்கனவே உள்ள கடனை மாற்றுபவர்கள் புதிய விகிதங்களின் பலனைப் பெறுவார்கள் என்று வங்கி கூறுகிறது.


வீடுகளுக்கான தேவை அதிகரிக்கிறது


வட்டி விகிதக் குறைப்பு, பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாகும். இந்த வட்டி விகிதக் குறைப்பால், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (UBI) வீட்டுக் கடன் வட்டித் துறையில் மற்ற வங்கிகளுக்கு கடுமையான போட்டியை அளிப்பதாக வங்கி கூறுகிறது.


ALSO READ: இனி கனவு இல்லம், வாகனம் சாத்தியமே; வட்டி விகிதத்தை ‘இந்த’ வங்கி குறைத்துள்ளது..!! 


அதிக கிரெடிட் ஸ்கோரில் அதிக நன்மைகள்


வீட்டுக் கடனில் 6.40 சதவீதம் என்ற இந்த மலிவான வட்டியின் பலன் 800-க்கும் மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர்களில் கிடைக்கும் என்று வங்கி கூறியுள்ளது. யூனியன் வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ ராஜ்கிரண் ராய் கூறுகையில், 'டெபாசிட்களுக்கு குறைந்த வட்டி விகிதங்கள் இருப்பதால், எங்களால் கடன் விகிதங்களை குறைக்க முடிகிறது. மேலும் இந்த குறைவு எதிர்காலத்திலும் தொடரும். வங்கியின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, அதிக கடன் ஸ்கோரை பெற்றவர்கள் அனைத்து வகையான கடன்களிலும் அதிக நன்மைகளைப் பெறுகிறார்கள்.’ என்றார்.


செப்டம்பரிலும் வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டன


யூனியன் வங்கி முன்னதாக 8 செப்டம்பர் 2021 அன்று வீட்டுக் கடன்கள் உட்பட அனைத்து வகையான கடன்களின் வட்டி விகிதங்களையும் மாற்றியது. வங்கியின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, 700க்கு மேல் உள்ள கிரெடிட் ஸ்கோருக்கு ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் (Interest Rate) 6.85 சதவீதம் ஆகும். இதற்கு மேல் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.95 சதவீதம் ஆகும். 700க்கு கீழ் உள்ள கிரெடிட் ஸ்கோருக்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். அதேசமயம் பெண்களுக்கான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களில் .05 சதவீதம் தள்ளுபடி உள்ளது.


ALSO READ: Good News அளித்தது PNB: வட்டி விகிதங்களை குறைத்து அதிரடி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR