சம்பள உயர்வு நிச்சயம், ஐ.டி. துறையில் அதிக அதிகரிப்பு: ஆய்வு வெளியிட்ட குட் நியூஸ்
பணியாளர்களுக்கு நல்ல செய்தி. பல்வேறு நிறுவன ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 10 சதவிகித அதிகரிப்பை காணக்கூடும்.
சுமார் இரு ஆண்டுகளாக உலக மக்களை பாடாய் படுத்தி வந்த கோவிட்-19 நோய்த்தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், பல தொழில்கள் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. இது நாட்டின் தொழிலாள வர்க்கத்திற்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Conferry India இன் சமீபத்திய அறிக்கையின்படி, பல்வேறு நிறுவன ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 10 சதவிகித அதிகரிப்பை காணக்கூடும்.
நிறுவனங்களின் நிதி நிலையும் வலுவாக வளர்ந்துள்ளது. கோவிட் (Covid-19) நோய்த்தொற்று துவங்குவதற்கு முன்னர், 2019 இல், நிதி நிலை அதிகரிப்பு சுமார் 9.25 சதவீதமாக இருந்தது. 2021 இல் இது சுமார் 8.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் இந்த அதிகரிப்பு 9.5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வுக்கான (Salary Increase) காரணம் தெளிவாக உள்ளது என சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பிறகு, நுகர்வோர் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும் நிறுவனங்கள் நல்ல லாபங்களையும் பெற்றுள்ளன. இதன் விளைவாக பல வித நிறுவனங்களும் நல்ல வணிகங்களையும், வியாபாரத்தையும், லாபத்தையும், வளர்ச்சியையும் பெற்று வருகின்றன.
நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை பணியாளர்களின் ஊதியய கணக்கில் போட முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டில் நிலவும் 'Work From Home' கலாச்சாரத்தையும் மனதில் வைத்து நிறுவனங்கள் தாங்கள் பணியாளர்களுக்கு அளிக்கவுள்ள நன்மைகளையும் வசதிகளையும் பற்றி முடிவெடுத்துள்ளன. அந்த விவரங்களை இங்கே காணலாம்:
- சுமார் 46 சதவீத நிறுவனங்கள் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நலன்கள் மற்றும் கூடுதல் பலன்களை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
- 43 சதவீத நிறுவனங்கள் வீட்டிலேயே அலுவலக அமைப்பை (Home Office Set up) உருவாக்கிக் கொடுக்கவும், பலவித கொடுப்பனவுகளை அளிக்கவும் தயாராகி வருகின்றன.
- 60 சதவீத நிறுவனங்கள் வைஃபை மற்றும் பயன்பாட்டு நிதியை (Wifi and Utility Bill) அளிக்க தயாராக உள்ளன.
ALSO READ | பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!
தொழில் சந்தையில் பல நிறுவனங்கள் சிறந்த ஊதிய பேக்கேஜுகளை அளிக்க தயாராக உள்ளதால், 40 சதவீத பணியாளர்கள் (Employees) தங்கள் வேலையை மாற்ற எண்ணம் கொண்டுள்ளார்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தங்கள் பணியாளர்களை தங்களிடமே தக்க வைத்துக்கொள்ள, நிறுவனங்கள் இப்படிப்பட்ட வசதிகளையும் கூடுதல் சலுகைகளையும் வழங்க வேண்டியது கட்டாயமாகி விடுகின்றது.
அறிக்கையின்படி சம்பளத்தில் துறை வாரியாக எதிர்பார்க்கப்படும் ஊதிய அதிகரிப்புகள்:
- ஐடி துறை: 10.5 சதவீதம்
- நுகர்வோர் துறை: 10.1 சதவீதம்
- வாழ்வியல் (Life Science) துறை: 9.5 சதவீதம்
- ஆட்டோ மற்றும் கெமிக்கல் துறை: 9 சதவீதம்
ALSO READ | PF கணக்கிலிருந்து இரண்டாவது முறையும் கோவிட் அட்வான்ஸ் எடுக்கலாம்: செயல்முறை இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR