Employee Pension Scheme : இரட்டிப்பாகுமா ஓய்வூதியம்? ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அப்டேட்!!

தற்போது, ​​ஓய்வூதியம் கிடைக்கக்கூடிய சம்பளத்தின் அளவு அதிகபட்சமாக மாதம் ரூ.15,000 என்று உள்ளது. அதாவது, உங்கள் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும், ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000-க்கு மட்டுமே செய்யப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2022, 11:58 AM IST
  • பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்படும்.
  • தற்போது இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
  • தற்போது, ​​ஓய்வூதியம் கிடைக்கக்கூடிய சம்பளத்தின் அளவு அதிகபட்சமாக மாதம் ரூ.15,000 என்று உள்ளது.
Employee Pension Scheme : இரட்டிப்பாகுமா ஓய்வூதியம்? ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அப்டேட்!! title=

Employee Pension Scheme: பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்படும். தற்போது இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்த முடிவின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

EPS வரம்பை நீக்குவதன் பின்னணி என்ன?

தற்போது, ​​ஓய்வூதியம் (Pension) கிடைக்கக்கூடிய சம்பளத்தின் அளவு அதிகபட்சமாக மாதம் ரூ.15,000 என்று உள்ளது. அதாவது, உங்கள் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும், ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000-க்கு மட்டுமே செய்யப்படும். இந்த வரம்பை நீக்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஊழியர்களின் ஓய்வூதியத்தை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது என்று இந்திய யூனியன் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தாக்கல் செய்த ஒரு தொகுதி மனுக்களின் விசாரணையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இப்போது EPS தொடர்பான விதிகள் என்ன?

நாம் ஒரு வேலையைத் தொடங்கி EPF-ல் உறுப்பினராகும்போது, ​​அதே நேரத்தில் EPS-லும் உறுப்பினராகிவிடுகிறோம். ஊழியர் தனது சம்பளத்தில் 12% EPF இல் கொடுக்கிறார், அதே தொகையை அவரது நிறுவனமும் கொடுக்கிறது. ஆனால் இதில் ஒரு பகுதி, 8.33% EPS-சிலும் செல்கிறது. நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி, தற்போது ஓய்வூதியத்துக்கான அதிகபட்ச ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதாவது ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பங்கு அதிகபட்சம் (15,000 இல் 8.33%) ரூ 1250 ஆக மட்டுமே இருக்கும்.

ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15 ஆயிரமாக கருதப்படுகிறது. இதன்படி, இபிஎஸ்-ன் கீழ் ஒரு ஊழியர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உள்ளது.

இப்படித்தான் ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது
செப்டம்பர் 1, 2014 க்கு முன் நீங்கள் EPS-க்கு பங்களிக்கத் தொடங்கியிருந்தால், உங்களுக்கான ஓய்வூதிய பங்களிப்புக்கான அதிகபட்ச மாத சம்பள வரம்பு ரூ.6500 ஆக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். செப்டம்பர் 1, 2014-க்குப் பிறகு நீங்கள் EPS இல் சேர்ந்திருந்தால், அதிகபட்ச சம்பள வரம்பு 15,000 ரூபாயாக இருக்கும். இப்போது ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்க்கலாம். 

EPS கணக்கீட்டு சூத்திரம்
மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x EPS பங்களிப்பு வருடங்கள் )/70
செப்டம்பர் 1, 2014 க்குப் பிறகு ஊழியர் EPS க்கு பங்களிக்கத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொண்டால், ஓய்வூதிய பங்களிப்பு 15,000 ரூபாயாக இருக்கும். அவர் 30 ஆண்டுகள் பணிபுரிந்தார் என்று வைத்துக்கொள்வோம்.

மாதாந்திர ஓய்வூதியம் = 15,000X30/70 = ரூ 6428

ALSO READ | EPFO முக்கிய செய்தி: இ-நாமினேஷன் செய்யலையா? இந்த நன்மைகள் கிடைக்காது!!

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம்
நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம்  என்னவென்றால், பணியாளரின் (Employees) 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை 1 வருடமாகக் கருதப்படும். 6 மாதங்களுக்கு கீழ் இருந்தால், அப்படி கணக்கிடப்படாது. அதாவது, பணியாளர் 14 ஆண்டுகள் 7 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அது 15 ஆண்டுகளாகக் கருதப்படும். ஆனால் நீங்கள் 14 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வேலை செய்திருந்தால், 14 ஆண்டுகளாக மட்டுமே கணக்கிடப்படும். EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் 1000 ரூபாய், அதிகபட்ச ஓய்வூதியம் 7500 ரூபாய் ஆகும்.

ரூ. 8,571 ஓய்வூதியம் கிடைக்கும்
15 ஆயிரம் என்ற வரம்பு நீக்கப்பட்டு, ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக இருந்தால், பார்முலாவின்படி உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியம் இப்படித்தான் இருக்கும். 
(20,000 X 30)/70 = ரூ 8,571. 

ஓய்வூதியத்திற்கான (EPS) தற்போதைய நிபந்தனைகள் 
- ஓய்வூதியத்திற்கு EPF உறுப்பினராக இருப்பது அவசியம்.
- குறைந்தபட்சம் 10 வருடங்கள் வழக்கமான பணியில் இருப்பது கட்டாயமாகும்.
- பணியாளருக்கு 58 வயதாகும் போது ஓய்வூதியம் கிடைக்கும்.
- 50 ஆண்டுகளுக்குப் பிறகும், 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியம் பெறும் வசதி உள்ளது.
- முதல் ஓய்வூதியத்தில், நீங்கள் குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் படிவம் 10D ஐ நிரப்ப வேண்டும்.
- ஊழியர் இறந்தால், குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
- சேவை வரலாறு 10 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால், அவர்கள் 58 வயதில் ஓய்வூதியத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வசதி கிடைக்கும்.

ALSO READ | PF Advance Withdrawal தொடர்பான முக்கிய செய்தி: தொற்று காலத்தில் பெரிய நிவாரணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News