IDBI Bank : கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி, எஃப்டி விகிதங்களில் மாற்றம்
IDBI Bank FD Interest Rates : எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கிக்குப் பிறகு, ஐடிபிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது
ஐடிபிஐ வங்கி எஃப்டி வட்டி விகிதங்கள்: எச்டிஎஃப்சி வங்கிக்குப் பிறகு, இப்போது மற்றொரு தனியார் வங்கியான ஐடிபிஐ வங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. முன்பு செமி கவர்ண்மெண்ட் வங்கியாக இருந்த இந்த வங்கி தற்போது தனியார் வங்கியாக மாறிவிட்டது.
மாற்றங்கள் ஏப்ரல் 20 முதல் அமலுக்கு வரும்
ஐடிபிஐ வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. இந்த மாற்றத்துக்கு பிறகு இப்போது எஃப்டி-யில் பணம் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட அதிக வட்டி கிடைக்கும். வட்டி விகிதத்தில் வந்துள்ள மாற்றம் ஏப்ரல் 20 முதல் அமலுக்கு வந்துள்ளது.
குறைந்தபட்ச வட்டி விகிதம் 2.70 சதவீதம்
மாற்றத்திற்குப் பிறகு, ஐடிபிஐ வங்கி 6 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 2.70 சதவீதம் முதல் 5.60 சதவீதம் வரை வட்டி தருகிறது. முன்னதாக, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கிகளும் எஃப்டி டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.
ஐடிபிஐ வங்கி 7 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை ரூ.2 கோடி டெபாசிட்களுக்கு முன்பிருந்த 2.7 சதவீத வட்டி விகிதத்தை அப்படியே வைத்துள்ளது. 31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான காலக்கட்டத்தில், முன்பிருந்த 2.80 சதவீதத்திற்கு பதிலாக 3 சதவீத வட்டி கிடைக்கும்.
ஒரு அறிக்கையின்படி, ஐடிபிஐ வங்கி சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த வங்கி முன்பு செமி கவர்ண்மெண்ட் வங்கியாக இருந்தது. அது இப்போது முற்றிலும் தனியார் வங்கியாகி விட்டது.
மேலும் படிக்க | HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: எஃப்டி வட்டி விகிதங்களின் மாற்றம்
ஐடிபிஐ வங்கியின் புதிய எஃப்டி வட்டி விகிதங்கள்
07-14 நாட்கள்: 2.7 சதவீதம்
15-30 நாட்கள்: 2.7 சதவீதம்
31-45 நாட்கள்: 3 சதவீதம்
46-60 நாட்கள்: 3.25 சதவீதம்
61-90 நாட்கள்: 3.4 சதவீதம்
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை: 3.75 சதவீதம்
6 மாதங்கள் முதல் 270 நாட்கள் வரை: 4.4 சதவீதம்
271 நாட்களில் இருந்து 1 ஆண்டுக்கு குறைவான காலம் வரை: 4.5 சதவீதம்
1 வருடத்திற்கு: 5.15 சதவீதம்
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை: 5.25 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: 5.35 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: 5.5 சதவீதம்
5 ஆண்டுகளுக்கு: 5.6 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை: 5.6 சதவீதம்
7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: 5.5 சதவீதம்
(மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு கால அளவிற்கும் 0.50 சதவீதம் அதிகமாகும்.)
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, 13% டிஏ ஹைக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR