சம்பள விதிகள் மாற்றம், சமீபத்திய அப்டேட்: செப்டம்பர் 1 முதல், ஊழியர்களுக்கான புதிய சம்பள விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதன் பிறகு அவர்களது ஊதிய முறைகளில் பல மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகின்றது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். ஊழியர்களுக்கு சம்பளம் தொடர்பான புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய விதிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாத ஊதியம் பெரும் அனைத்து பணியாளர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி உள்ளது. உங்கள் நிறுவனம் உங்களுக்கு ஒரு வீட்டை அல்லது தங்குமிடத்தை அளித்திருந்து, அதற்கு நீங்கள் வாடகை செலுத்திக்கொண்டு இருக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மதிப்பீடு (வேல்யுவேஷன்) தொடர்பான விதிகளில் சிபிடிடி (CBDT) நிவாரணம் வழங்கியுள்ளது. இதை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். 


CBDT பெர்கிசைட் மதிப்பீட்டின் (Perquisite Valuation) வரம்பை குறைத்துள்ளது. அதாவது இப்போது அலுவலகத்தில் இருந்து பெற்ற வீட்டிற்கு ஈடாக சம்பளத்தில் வரிச்சலுகை குறைவாக இருக்கும். அதாவது அதிக சம்பளம் உங்கள் கைக்கு வரும். இந்த விதி அடுத்த மாதம் முதல், அதாவது செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.


இந்த வரி தொடர்பான விதிகள் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பல பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தங்குமிடங்களை வழங்குகின்றன. ஆனால் அதற்கு பதிலாக அவர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதில்லை. இது வருமான வரி விதிகளின் கீழ் Perquisite இல் சேர்க்கப்பட்டுள்ளது. Perquisite இல், பணியாளர் வாடகை செலுத்த வேண்டியதில்லை, ஆனால் அவரது வரி பொறுப்பு இதில் இருக்கும். 


சம்பளத்தின் ஒரு பகுதியான வரிக்கான பெர்கியூசிட் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடு இருக்கும் இடத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தப் பங்கீடு செய்யப்படலாம்.


மேலும் படிக்க | மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சம்பளத்துடன் மதிப்பீட்டு வரி சேர்க்கப்படுகிறது. இதன் பொருள் நீங்கள் வாடகை செலுத்தாவிட்டாலும், அது உங்கள் வருமான வரி கணக்கீட்டை அதிகரிக்கிறது.


இப்போது இந்த பகுதியின் வரம்பு CBDT ஆல் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் வாடகை இல்லாத வீட்டிற்கு பதிலாக, அதன் மதிப்பீடு சம்பளத்தில் அதிகரிக்கும். ஆனால் அதன் வரம்பு முன்பை விட குறைவாக இருக்கும். அந்த அறிவிப்பின்படி, மத்திய, மாநில அரசு ஊழியர்களும், வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிறுவனத்திடம் இருந்து அத்தகைய இடவசதியைப் பெற்றிருந்தால், மதிப்பீடு பின்வருமாறு இருக்கும்.


அதிக பணம் கைக்கு வரும்


இந்த முடிவால், நிறுவனங்கள் கொடுத்த வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் நிம்மதி அடைவார்கள். மதிப்பீட்டு வரம்பு குறைக்கப்படுவதன் மூலம், வரி விதிக்கக்கூடிய வருமானம் குறையும், எனவே வரி பொறுப்பும் குறையும். இதன் மூலம் ஊழியர்கள் கைகளில் அதிக பணம் வரும் என்று அர்த்தம்.


அடுத்த மாதம் ஊதிய உயர்வு


ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு மொத்த அகவிலைபப்டியை 45 சதவீதமாக உயர்த்தும் என ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். எனினும், 4 சதவிகித உயர்வு இருக்கும் என மற்றொரு தரப்பினர் நம்புகின்றனர். இந்த அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு செப்டம்பர் 2023 -இல் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 7வது ஊதியக் குழு பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களின் சுமையை குறைக்க அகவிலைப்படியை (DA Hike) வழங்குகிறது.  


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட், ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்..விரைவில் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ