COVID-19 இன் இரண்டாவது அலை ஏற்கனவே நாட்டு மக்களை பாடாய் படுத்து வருகிறது. இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டின் ஊதியக் குறியீட்டின் கீழ் தொழிலாளர் சீர்திருத்தங்களை அமல் படுததும் மனநிலையில் அரசாங்கம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவிருந்தன. எனினும், இவை அப்போது ஒத்திவைக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு ஊடக அறிக்கையின்படி, தொற்றுநோய் (Pandemic) பல மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் தொழிலாளர்களின் புதிய ஊதியக் குறியீடுகளை செயல்படுத்துவதற்கான கட்டமைப்புக்கான சத்தியக்கூறுகள் குறைத்துள்ளன.


வரைவு விதிகளை அமல்படுத்த மாநிலங்களை சமாதானப்படுத்த மத்திய அரசு (Central Government) பலறை முயற்சித்த போதிலும், தொடரும் தொற்றுநோய் காரணமாக இது குறித்த முடிவுகளை எடுக்க மாநிலங்கள் தங்களது நேரத்தை எடுத்து வருகின்றன. 


ALSO READ: இப்போதைக்கு அமலுக்கு வராது புதிய ஊதியக் குறியீடு: வந்தால் salary slip-ல் வரப்போகும் மாற்றம் என்ன?


புதிய ஊதியக் குறியீட்டை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள இந்த தாமதம் இந்திய பெரு நிறுவனங்களுக்கு ஒரு வரமாக அமைந்துள்ளது. புதிய குறியீடுகளுக்கு இணங்க தேவையான சிக்கலான மாற்றங்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருந்த நிறுவனங்களுக்கு தற்போது அவகாசம் கிடைத்துள்ளது. இந்த தாமதத்தால், புதிய விதிகளின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்டபடி ஊழியர்களின் சம்பள கட்டமைப்புகளை மறுசீரமைக்க நிறுவனங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். 


புதிய விதிமுறைகளின் கீழ் ஊதியங்களின் (Salary) கொடுப்பனவு கூறு மீதான 50 சதவீத கட்டாய வரம்பை தளர்த்துமாறு நிறுவனங்கள் முன்பு மத்திய அரசிடம் கேட்டிருந்தன. அது அவர்களின் நிதி வல்லமையை வலுப்படுத்த உதவியாக இருக்கும் எனவும், அது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் நிறுவனங்கள் கருதுகின்றன. 


இந்த ஆண்டு விதிகள் அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றும், அடுத்த ஆண்டு இவை செயல்படுத்தப்படக் கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இந்த ஆண்டு ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச்செல்லும் ஊதியத்தில் குறைவு இருக்காது.


ALSO READ: ஊழியர்கள் உஷார்: இனி 12 மணி நேர பணி நேரம், சம்பளம் குறையும், PF அதிகரிக்கும், விவரம் உள்ளே!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR