புதுடெல்லி: கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக, மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை சராசரியாக 7.3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணக்கெடுப்பின்படி, எதிர்பார்த்ததை விட சிறந்த பொருளாதார மீட்சி, வணிக மற்றும் நுகர்வோர் தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சில நன்மைகளை வழங்கக்கூடும்.


கடந்த ஆண்டை விட சம்பளம் அதிகரிக்கும்


இந்த கணக்கெடுப்பை Deloitte Touche Tohmatsu India LLP (DTTILLP) மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு சராசரி சமபள உயர்வு (Salary Hike) 4.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டின் உயர்வு இதை விட அதிகமாக இருக்கும் என இந்த கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 2019 ல் அளிக்கப்பட்ட 8.6 சதவீத சம்பள உயர்வைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற 92 சதவீத நிறுவனங்கள் இந்த ஆண்டு தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தருவதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 60 சதவீத நிறுவனங்கள் சம்பள உயர்வு அளிப்பதாக உறுதியளித்திருந்தனர். இதன்படி, இந்த ஆண்டு ஊழியர்களுக்கு மிக நல்ல ஆண்டாக இருக்கும்.


400 நிறுவனங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது


இந்த ஆய்வு 2020 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதில் 400 நிறுவனங்கள் 7 துறைகள் மற்றும் 25 துணைத் துறைகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் இந்த ஆண்டு சராசரி சம்பளத்தை 7.3 சதவீதம் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த ஆண்டு, 2020-ல் 4.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டிற்கான அதிகரிப்பு 2019 இல் செய்யப்பட்ட 8.6% சம்பள உயர்வை விட குறைவாக உள்ளது.


ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ள பம்பர் சலுகைகள் இதோ


20 சதவீத நிறுவனங்கள் இரட்டை இலக்க அதிகரிப்புகளை வழங்கும்


'கொரோனா (Corona) தொற்றுநோய்க்குப் பிறகு, நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த பொருளாதார மீட்சி, வணிக மறுமலர்ச்சி மற்றும் நுகர்வோர் நம்பிக்கை ஆகியவை அதிகரித்துள்ளன. இவற்றின் காரணமாக நிறுவனங்கள் தங்கள் இலாபமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றன என்று கணக்கெடுப்பு கூறுகிறது. கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு 20 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கப் போகின்றன. 2020 ஆம் ஆண்டில் 12 சதவீத நிறுவனங்கள் மட்டுமே அவ்வாறு செய்தன.


2020 ஆம் ஆண்டில், ஊதிய உயர்வு அளித்த 60 சதவீத நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஆஃப்-சைக்கிள் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தன.


இந்தத் துறைகளில் அதிகமாக சம்பளம் உயர்த்தப்படும்


கணக்கெடுப்பின்படி, 2020 ஆம் ஆண்டில் சம்பள உயர்வு வழங்காத நிறுவனங்களில், 30 சதவீத நிறுவனங்கள் மட்டுமே சம்பள உயர்வு அல்லது போன்ஸ் மூலம் அதற்கு இழப்பீடு வழங்குவார்கள். கணக்கெடுப்பின்படி, லைஃப் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (ஐடி) துறை (IT Sector) அதிக சம்பள உயர்வை வழங்கக்கூடும்.


இந்த துறைகளில் ஊதிய உயர்வு மிகக் குறைவாக இருக்கும்


உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், ஊழியர்களின் சம்பளம் மிகக் குறைவாக அதிகரிக்கும். 2019 ஆம் ஆண்டின் சம்பள உயர்வுக்கு சமமான உயர்வை வழங்கக்கூடும் ஒரே துறை லைஃப் சயின்ஸ் துறை மட்டுமே. மீதமுள்ள துறைகள் 2019 ஐ விட 2021 ஆம் ஆண்டில் குறைந்த சம்பள உயர்வுகளையே வழங்கும். ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் துறை நிறுவனங்கள் மட்டுமே 2021 ஆம் ஆண்டில் சம்பளத்தை இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கும். ஹாஸ்பிடாலிடி, ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் மிகக் குறைந்த சம்பள உயர்வு இருக்கும்.


ALSO READ: 7th Pay Commission: TA Claim செய்யும் விதிகளில் தளர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR