PM Kisan பயனாளிகளுக்கு ஜாக்பாட் செய்தி, விவசாயிகளின் கணக்கில் ரூ.6000
PM Kisan News: நவம்பர் 15 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 15வது தவணையை 8 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றினார்.
பிரதம மந்திரி கிசான் 15வது தவணை: நவம்பர் மாதம் முடிவுக்கு வரும் முன், மோடி அரசு விவசாயிகளுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அதாவது நவம்பர் 15 ஆம் தேதி, பிரதமர் மோடி 15வது தவணையில் 2000 ரூபாயை டிபிடி மூலம் விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றினார். ஆனால் தற்போது நிலுவையில் உள்ள தவணை தொகையும் விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில், KYC முடிக்கப்படாததால்,சில விவசாயிகளின் கணக்கில் 13 மற்றும் 14 வது தவணை பணம் வரவில்லை. இப்போது அவர்களின் கணக்குகளுக்கும் அரசாங்கம் பணத்தை மாற்றுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் கணக்கில் ஒரே நேரத்தில் 6000 ரூபாய் வந்து கொண்டிருக்கிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்:
பல விவசாயிகளின் கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகள் விழுகின்றன. மூன்று தவணைகள் அனுப்பப்படும் விவசாயிகளின் கடைசி இரண்டு தவணை ஆவணங்கள் பூர்த்தி செய்யப்படாததால் நிலுவையில் இருந்தது. இப்போது விவசாயிகளின் கணக்குகளுக்கு பணம் வரும்போது, அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நவம்பர் 15 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 15வது தவணையை (PM Kisan) 8 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றினார். இதையடுத்து, நவம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் விவசாயிகளின் கணக்கில் ரூ.2000-2000 வந்தது.
சில விவசாயிகளின் கணக்கில் 4000 ரூபாய் வந்துள்ளது:
தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகள் என்ற செய்தி வந்தபோது, முதலில் விவசாயிகளால் நம்ப முடியவில்லை. ஆனால் பின்னர் கணக்கை சரிபார்த்தபோது கணக்கில் ரூ.6000 இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த முறை ரூ.4000 தங்கள் கணக்கில் வந்துள்ளதாக சில விவசாயிகள் கூறுகின்றனர். இம்முறை, 14வது தவணை நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு, 4,000 ரூபாய் அரசால் வழங்கப்பட்டது. ஏற்கனவே விவசாயிகளின் கணக்குகளில் 14 தவணைகளில் ரூ.2.62 லட்சம் கோடிக்கு மேல் அரசு செலுத்தியுள்ளது.
இந்த முறை நீங்கள் ரூ.2000 தவணை பெறவில்லை என்றால், PM-Kisan Helpdesk மூலம் புகார் செய்யலாம். இது தவிர, 011-24300606 மற்றும் 155261 என்ற ஹெல்ப்லைன் எண்களிலும் அல்லது 18001155266 என்ற கட்டணமில்லா எண்ணிலும் புகார் அளிக்கலாம். உங்கள் புகாரை pmkisan-ict@gov.in அல்லது pmkisan-funds@gov.in என்ற முகவரிக்கும் மின்னஞ்சல் செய்யலாம்.
புகாரை பதிவு செய்யும் முன் விவசாயிகள் தாங்கள் Beneficiary list-ல் இருக்கிறோமா என்பதை சரிபார்க்க செய்ய வேண்டியவை:
1. முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்.
2. Farmers Corner-ல் உள்ள Beneficiary Status-ஐ கிளிக் செய்யவும்.
3. அங்கு காண்பிக்கப்படும் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை தேர்வு செய்து நிரப்பவும்.
4. பின் ரெஜிஸ்டர்ட் செய்யப்பட்ட ஆதார் அல்லது பேங்க் அக்கவுண்ட் நம்பரை என்டர் செய்யவும்.
5. இன்ஸ்டால்மென்ட் ஸ்டேட்டஸை சரி பார்க்க Get Data-வை கிளிக் செய்யவும்.
PM-Kisan Yojana-வில் சேர உதவும் எளிய வழிமுறைகள்:
6. அதிகாரப்பூர்வ வெப்சைட்டான www.pmkisan.gov.in- விசிட் செய்து New Farmer Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
7. பின் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யவும்.
8. ஒருவர் நகர்ப்புற விவசாயியாக இருந்தால், “Urban Farmer” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்; கிராமப்புற விவசாயிகள் “Rural Farmer” என்பதை தேர்வு செய்யவும்.
9. பிறகு ஆதார் நம்பர், மொபைல் நம்பர் உள்ளிட்டவற்றை என்டர் செய்யவும். பின் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் நிலம் பற்றிய விவரங்களை என்டர் செய்யவும்.
10. பிறகு உங்கள் நிலம் தொடர்பான டாகுமெண்ட்ஸை அப்லோட் செய்யவும்.
11. இறுதியாக கேப்ட்சா கோட்-ஐ என்டர் செய்து Get OTP என்பதை கிளிக் செய்து, உரிய மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ என்டர் செய்வதன் மூலம் ப்ராசஸை முடிக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ